darbar
  • January
    23
    Thursday

Main Area

Main



தர்பார் படத்தில் நயன் மட்டுமில்ல இன்னொரு நடிகையும் நடிச்சிருக்காங்களாம்! யாருன்னு தெரியுமா?

தர்பார்
தர்பார்

தர்பார் படத்தில் நடிகை ஸ்ரேயா சிறிய வேடத்தில் நடித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

darbar

இயக்குநர்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக  நயன்தாரா நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரஜினிகாந்த்  காவலராக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கியது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த வாரம் ரஜினிகாந்த் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார். 

darbar

இந்நிலையில்  நடிகை ஸ்ரேயா தர்பார் படத்தில் மற்றொரு நாயகியாக இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட  புகைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகை ஸ்ரேயா, இயக்குநர் முருகதாஸ், சண்டை இயக்குநர் பீட்டர் ஹெயின் ஆகியோர் உள்ளனர்.

darbar

இதன் மூலம்  இப்படத்தில் ஸ்ரேயா சிறிய வேடத்தில் நடித்திருப்பதாகவும், அது சஸ்பென்ஸாக  வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது. ஏற்கனவே ஸ்ரேயா  நடிகர் ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. 
 

2018 TopTamilNews. All rights reserved.