சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டுதலங்கள் மீண்டும் திறப்பு!

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டுதலங்கள் மீண்டும் திறப்பு!

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டுதலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டுதலங்கள் மீண்டும் திறப்பு!

தமிழகத்தில் 7 ஆம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில் வழிபாட்டு தலங்கள், மால்கள், பேருந்துகள், படப்பிடிப்பு உள்ளிட்டவற்றிற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக வழிப்பாட்டு தலங்கள் திறக்கக்கோரி மக்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர். வீடுகளில் முடங்கி கிடந்து மன அளவிலும், பொருளாதார நிலையிலும் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் கோயில் திறந்தால் ஓரளவு மன நிம்மதி கிடைக்கும் என்று நம்பினர்.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டுதலங்கள் மீண்டும் திறப்பு!

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்றுமுதல் தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டுதலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 6 அடி தனிமனித இடைவெளி பின்பற்றி மாஸ்க் அணிந்து பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.