“பாஜகவில் சேர்ந்தால் பணம்” என தன்னிடம் பேரம் பேசப்பட்டது- முன்னாள் அமைச்சர் பரபரப்பு

 

“பாஜகவில் சேர்ந்தால் பணம்” என தன்னிடம் பேரம் பேசப்பட்டது- முன்னாள் அமைச்சர் பரபரப்பு

2019ஆம் ஆண்டு நான் பாஜகவில் சேர எனக்கு பணம் கொடுக்க பேரம் பேசப்பட்டது உண்மைதான் என முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பாஜகவில் சேர்ந்தால் பணம்” என தன்னிடம் பேரம் பேசப்பட்டது- முன்னாள் அமைச்சர் பரபரப்பு

கர்நாடகாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் போது, காங்கிரஸ், ம.ஜ.த.,வை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.,க்கள் அக்கட்சிகளிலிருந்து விலகினர். இதுவே குமாரசாமி ஆட்சி கவிழ காரணம். இதில் பல நூறு கோடிகள் கட்சி மாறிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டதாக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் குற்றம்சாட்டியது.

இந்நிலையில் கட்சி மாறிய சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான காக்வாட் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீமந்த் பாட்டில் தனக்கு பாஜகவில் சேர பண பேரம் பேசப்பட்டது உண்மைதான், ஆனால் அந்த பணம் பெறாமல் பாஜகவில் இணைந்தேன் என பேட்டியளித்துள்ளார்.ஸ்ரீமந்த் பாட்டில் கட்சி தாவிய பிறகு அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அண்மையில் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் தனக்கு பாஜக பணம் பேரம் பேசியது உண்மைதான் விரைவில் எனக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்ட பிறகு ஆட்சிக் கவிழ்ப்பு நடந்துள்ளது என்ற தகவல் வெளியாகி, பாஜகவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் தற்பொழுது பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீமந்த் பாட்டில் பேட்டியால் கர்நாடக பாஜகவிற்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.