வெளிநாட்டு நிதி நோ…. பொதுமக்களிடம் திரட்டப்படும் நிதியில் ராமர் கோயில் கட்டப்படும்… அறக்கட்டளை தகவல்

வெளிநாட்டு நிதி நோ…. பொதுமக்களிடம் திரட்டப்படும் நிதியில் ராமர் கோயில் கட்டப்படும்… அறக்கட்டளை தகவல்

உள்நாட்டில் பொதுமக்களிடம் திரட்டப்படும் நிதியில்தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அயோத்தியில் இந்துக்களின் கனவான ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைமையில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று ஸ்ரீராம ஜென்மபூமியில் நடந்த பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு ராமர் கோயில் கட்டுமான பணிக்கான அடிக்கல்லை நாட்டினார். இதனையடுத்து ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டு நிதி நோ…. பொதுமக்களிடம் திரட்டப்படும் நிதியில் ராமர் கோயில் கட்டப்படும்… அறக்கட்டளை தகவல்
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை

இந்த சூழ்நிலையில், ராமர் கோயில் கட்டுவதற்கு வெளிநாட்டில் நிதி திரட்டப்பட உள்ளதாக செய்தி வெளியானது. ஆனால் அதனை ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது: வெகுஜன தொடர்பு திட்டத்தின் வாயிலாக உள்நாட்டில் பொதுமக்களிடம் திரட்டப்படும் நிதியை பயன்படுத்தி அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். அறக்கட்டளைக்கு தேவையான ஒப்புதல்கள் இல்லாததால் எந்த வெளிநாட்டு நிதியையும் திரட்ட முடியாது. அதேவேளையில், கோயிலுக்கு அருகில் உள்ள கட்டிடங்களுக்கு சி.எஸ்.ஆர். (சமூக பொறுப்புணர்வு நிதி) நிதி பரிசீலனை செய்யலாம்.

வெளிநாட்டு நிதி நோ…. பொதுமக்களிடம் திரட்டப்படும் நிதியில் ராமர் கோயில் கட்டப்படும்… அறக்கட்டளை தகவல்
சம்பத் ராய்

ராமர் பக்தர்களிடமிருந்து தன்னார்வ நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படும். அதற்காக 10, 100 மற்றும் 1,000 ரூபாய் கூப்பன்கள் கிடைக்கும். நிதி ஒப்பந்தங்கள் மற்றும் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, அறக்கட்டளை ரூ.10 மதிப்பில் 4 கோடி கூப்பன்களையும், ரூ.100 மதிப்பில் 8 கோடி கூப்பன்களையும், ரூ.1,000 மதிப்பில் 12 லட்சம் கூப்பன்களையும் அச்சிட்டுள்ளது.