2023 டிசம்பருக்குள் அயோத்தி ராமர் கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும்.. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தகவல்

2023 டிசம்பருக்குள் அயோத்தி ராமர் கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும்.. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தகவல்

2023 டிசம்பருக்குள் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும் என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தகவல் தெரிவித்துள்ளது.

இந்துக்களின் கனவான ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைமையில் நடைபெற்று வருகிறது. 2020 ஆகஸ்ட் 5ம் தேதியன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைகள் நடைபெற்றது மற்றும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து அங்கு ராமா் கோயில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

2023 டிசம்பருக்குள் அயோத்தி ராமர் கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும்.. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தகவல்
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை

தற்போது ராமர் கோயிலின் முதல் கட்ட கட்டுமான பணிகள் விரைவில் முடிந்து விடும். கோயில் தளத்தில் இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்சேவாக் புரத்தில் உள்ள கற்களில் குறைந்தபட்சம் 70 சதவீதம் கோயிலின் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும். கட்டுமானத்தில் ஸ்டீல் அல்லது செங்கற்கள் பயன்படுத்தப்படாது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

2023 டிசம்பருக்குள் அயோத்தி ராமர் கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும்.. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தகவல்
ராமர் கோயில் கட்டுமானத்துக்கான கற்கள்

கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் நீண்ட ஆயுளை உறுதி செய்ய அதிக எண்ணிக்கையிலான ஆய்வுகள் மற்றும் நவீன மற்றும் பாரம்பரிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தப்படுகிறது என்று பெயர் வெளியிட விரும்பதா வட்டாரங்கள் தெரிவித்தன. 2023 டிசம்பருக்குள் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும். எனினும் கோயில் கட்டுமானம் 2025க்குள் முடிவடையும் என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.