30 நாட்களும் ரேசன் கடை இயங்க வேண்டுமா?கொந்தளிக்கும் ஊழியர்கள்

30 நாட்களும் ரேசன் கடை இயங்க வேண்டுமா?கொந்தளிக்கும் ஊழியர்கள்

மாதத்தின் 30 நாட்களும் ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியாசாமி அறிவித்துள்ளது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஆனால், ரேசன் கடை ஊழியர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

30 நாட்களும் ரேசன் கடை இயங்க வேண்டுமா?கொந்தளிக்கும் ஊழியர்கள்

ஏற்கனவே ஆள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், விடுமுறை இல்லாமல் பணி செய்ய வேண்டிய நிலையா என்று அவர்கள் நொந்து போயிருக்கிறார்கள்.

30 நாட்களும் ரேசன் கடை இயங்க வேண்டுமா?கொந்தளிக்கும் ஊழியர்கள்

இப்படி ஒரு சூழல் வரும் என்பதை உணர்ந்துதான், ரேசன் கடை பணியாளர்களின் காலியிடங்கள் விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

30 நாட்களும் ரேசன் கடை இயங்க வேண்டுமா?கொந்தளிக்கும் ஊழியர்கள்

நியாய விலைக்கடைகளில் அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்களை முழுமையாக வழங்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படிதான் காலியிடங்களை நிரப்பவும், மாதத்தின் 30 நாட்களும் ரேசன் கடைகள் இயங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

30 நாட்களும் ரேசன் கடை இயங்க வேண்டுமா?கொந்தளிக்கும் ஊழியர்கள்

இதையடுத்து, ஆசிரியர்களுக்கும், வங்கி அலுவலர்களுக்கும் மாதத்தில் பாதில் நாள் விடுமுறை வழங்கப்பட்டு வரும் நிலையில், நாங்கள் மட்டும் மாதத்தின் 30 நாளும் வேலை செய்ய வேண்டுமா? ஆசிரியர்கள், வங்கி அலுவலர்கள் சலுகைகள் தேவை இல்லை. அதே நேரம் எங்களுக்கும் வார விடுமுறை தேவை இல்லையா? நாங்கள் என்ன மிசினா? என்று கொதித்தெழுந்திருக்கிறார்கள்.