• March
    28
    Saturday

Main Area

Main



மனைவிக்கு சூடு போட்டார்   -மச்சான் தட்டிக்கேட்டார்   -மாமன் சுட்டு போட்டார் ..-மாமியார வெட்டி போட்டார் ...

death
death

டெல்லியை ஒட்டியுள்ள காசியாபாத்தில் சகோதரியை துன்புறுத்தியதை தட்டிக்கேட்டதற்காக  அந்த இளைஞனும் அவரது தாயும் தாக்கப்பட்டனர் . அதைப்பற்றி போலீசில் புகார் அளித்ததால்  மருமகனின் ஆட்கள்  அந்த இளைஞனை சுட்டுக் கொன்றனர்.  
சனிக்கிழமை பிற்பகல் காசியாபாத்தின் லோனி பார்டர் காவல் நிலையப் பகுதியின் மவுலானா ஆசாத் காலனியில், சுமார் ஆறுபேர்  சலீமின் பெஹாட்டா குடியிருப்புக்குள் புகுந்து ஒரு இளைஞரை  தோட்டாக்களால் சுட்டுக் கொன்றார்கள்

delhi

.இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :அந்த  குடியிருப்பில் வசிக்கும் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரின் சகோதரியை ,அவரது கணவர் சூடு வைத்தும் இன்னும் பலவகையிலும் கொடுமைப்படுத்தியுள்ளார் ,இதை சில நாட்களுக்கு முன்பு அவரது மாமியாரும் மச்சானும் தட்டிக்கேட்டுள்ளார்கள் ,அப்போது அவர்களை அவர் கடுமையாக தாக்கியுள்ளார் ,அதனால் அவர்கள் மாமன் மீது போலீசில் புகார் தந்துள்ளார்கள் ,அதனால் கோபமுற்ற மாமா சில அடியாட்களை வைத்து அந்த வாலிபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்

p

.துப்பாக்கி குண்டு சத்தம் கேட்ட அருகிலுள்ளவர்கள் போலீசுக்கு தகவல் தந்தனர் .போலீசார் விரைந்து வந்து அந்த நபரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி ,தப்பித்து ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்

2018 TopTamilNews. All rights reserved.