டிக்டாக்கிற்கு போட்டியாக ”ஷார்ட்ஸ்”-15 வினாடி வீடியோ சேவை – யுடியூப் அறிமுகம்

டிக்டாக்கிற்கு போட்டியாக ”ஷார்ட்ஸ்”-15 வினாடி வீடியோ சேவை – யுடியூப் அறிமுகம்

டிக்டாக் இடத்தை நிரப்பும் வகையில் யுடியூப் நிறுவனம், ஷார்ட்ஸ் என்ற புதிய வீடியோ சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இந்த சேவை அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கூகுள் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டாக்கிற்கு போட்டியாக ”ஷார்ட்ஸ்”-15 வினாடி வீடியோ சேவை – யுடியூப் அறிமுகம்

ஷார்ட்ஸ் என்ற இந்த புதிய சேவையின் மூலம் 15 வினாடிகளுக்கான காணொளியை பதிவேற்றலாம். மேலும் ஏற்கனவே பதிவேற்றப்பட்ட காணொளியை கண்டு களிக்கலாம்.
மேலும் இதை பயன்படுத்துவோருக்கு வசதியாக, பல வீடியோ கிளிப்களை ஒன்றாக இணைக்க பன்முக கேமரா வசதி இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் காணொளியின் நேரம், அளவு, கவுண்ட் டவுன் டைமர் மற்றும் வீடியோவின் வேகத்தை கட்டுப்படுத்தலாம் என தெரிகிறது.

டிக்டாக்கிற்கு போட்டியாக ”ஷார்ட்ஸ்”-15 வினாடி வீடியோ சேவை – யுடியூப் அறிமுகம்

இதில் கிடைக்கும் இசை மற்றும் பாடல்களுடன் சேர்த்து காணொளியை பதிவு செய்திட முடியும் என்றும் விரைவில் மேலும் பல பாடல்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. இதைத்தவிர வரும் வாரங்களில் மேலும் பல கூடுதல் வசதிகளை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.