நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு, தார்ப்பாய் தட்டுப்பாடு

நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு, தார்ப்பாய் தட்டுப்பாடு

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களினல் போதிய அளவு சாக்கு, தார் பாய்கள் இல்லாததால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர். அம்மாபேட்டை ஒன்றியத்தில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ், நெல் கொள்முதல்

நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு, தார்ப்பாய் தட்டுப்பாடு

நிலைகளில் நாள்தோறும் ஆயிரம் பைகள் பிடிக்கப்படும் என்றும், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான சாக்கு, தார்ப் பாய் ஆகியவை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், விவசாயிகள் அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால், அவற்றை பாதுகாக்க போதுமான தார் பாய்கள் இல்லை என அதிகாரிகள்

நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு, தார்ப்பாய் தட்டுப்பாடு

தெரிவித்துள்ளனர். இதனால் நெல்லை திறந்தவெளியில் கொட்டிவைக்கும் நிலையில், மழையில் நினைந்து நெல்கள் வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை பாதுகாக்க கொள்முதல் நிலையங்களில் செட் அமைக்க வேண்டும் என அவர்கள்

நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு, தார்ப்பாய் தட்டுப்பாடு

கோரிக்கை விடுத்துள்ளனர். கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான சாக்கு, தார்பாய்களை வழங்குவதுடன், நாள்தோறும் ஆயிரம் பைகள் நெல்லை பிடிக்க உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.