கொரோனா பாதிப்பு: கொடைக்கானலில் ஒரு வாரம் கடைகள் மூடல்!

 

கொரோனா பாதிப்பு: கொடைக்கானலில் ஒரு வாரம் கடைகள் மூடல்!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 4,985 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 87,235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகமாக இருந்த சென்னையில் தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது.

கொரோனா பாதிப்பு: கொடைக்கானலில் ஒரு வாரம் கடைகள் மூடல்!

தமிழகத்தில் விழுப்புரம், திருவாரூர், மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக கடைகளை அடைப்பதன் மூலம் பெரும்பாலும் கொரோனா பரவுவதை தடுக்கலாம் என்பதால் ஆங்காங்கே கடைகள் அடைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஒரு வாரத்துக்கு கடைகள் அடைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை பால் விற்பனை, மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும் என்றும் கொரோனாவை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.