வியாபாரிகள் 4 பேருக்கு கொரோனா உறுதி; 5 நாட்களுக்கு கடைகள் அடைப்பு.. வெறிச்சோடி காணப்படும் கடைத் தெரு!

 

வியாபாரிகள் 4 பேருக்கு கொரோனா உறுதி; 5 நாட்களுக்கு கடைகள் அடைப்பு.. வெறிச்சோடி காணப்படும் கடைத் தெரு!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,979 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சென்னையில் 85,859 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதில் திருவாரூர் மாவட்டமும் ஒன்று.

வியாபாரிகள் 4 பேருக்கு கொரோனா உறுதி; 5 நாட்களுக்கு கடைகள் அடைப்பு.. வெறிச்சோடி காணப்படும் கடைத் தெரு!

அம்மாவட்டத்தில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மூலமாக பாதிப்பு அதிகரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நன்னிலம் அருகே உள்ளே பேரளம் கடைத்தெருவில் 4 வியாபாரிகள் சென்னையில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்ததால் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் 4 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வியாபாரிகளுக்கு கொரோனா பரவியதால், அங்கு 5 நாட்களுக்கு கடைகளை மூட வணிகர்கள் சங்கத்தினர் முடிவெடுத்தனர். அதன் படி தற்போது பேரளத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. அங்கு மருந்தகங்கள் மட்டுமே திறந்துள்ள நிலையில், மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.