பிசினஸ் கணக்குகளில் ஷாப்பிங் பட்டன் – வாட்ஸ் அப் அறிமுகம்

 

பிசினஸ் கணக்குகளில் ஷாப்பிங் பட்டன் – வாட்ஸ் அப் அறிமுகம்

பிசினஸ் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் பொருட்களை பார்த்து எளிதில் வாங்குவதற்கு வசதியாக ஷாப்பிங் பட்டன் ஒன்றை வாட்ஸ் அப் ஏற்படுத்தி உள்ளது.

உலகெங்கிலும் 17.5 கோடி பேர் தினமும் பிசினஸ் வாட்ஸ் அப் கணக்கிற்கு மெசேஜ் அனுப்புவதும், பிசினஸ் வாட்ஸ் அப் கணக்குகளில் உள்ள கேட்டலாக்கை ஒவ்வொ ரு மாதமும் 4 கோடி பேர் பார்ப்பதாக வாட்ஸ்அப் நிறுவனத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதில் இந்தியாவில் மட்டும் 30 லட்சம் பேர் வாட்ஸ்அப் பிசினஸ் கணக்குகளில் உள்ள கேட்டலாக்கை பார்ப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வாட்ஸ் அப் பிசினஸ் கணக்கு வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு உதவிடும் வகையிலும், பொருட்கள் குறித்து இன்னும் எளிமையாகவும், விரைவாகவும் தெரிந்துகொள்ளும் வகையிலும் தனியாக ஷாப்பிங் பட்டன் ஒன்றை வாட்ஸ்அப் பிசினஸ் கணக்குளில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

பிசினஸ் கணக்குகளில் ஷாப்பிங் பட்டன் – வாட்ஸ் அப் அறிமுகம்

இதன்படி, பிசினஸ் கணக்கின் புரொபைல் அருகே இந்த ஷாப்பிங் பட்டன்அமைந்திருக்கும் என்றும், இந்த பட்டனை திறந்தால் அவர்கள் வைத்திருக்கும் கேட்டலாக் திறக்கும் என்றும் இதனால் தனியாக புரொபைல் உள்ளே சென்று கேட்டலாக் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

பிசினஸ் கணக்குகளில் ஏற்கனவே உள்ள வாய்ஸ் அழைப்புகள் மேற்கொள்வதற்கான பட்டனுக்கு பதிலாக இந்த ஷாப்பிங் பட்டன் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறி உள்ள வாட்ஸ்அப் நிறுவனம், இந்த புதிய வசதி உலகெங்கிலும் பயன்படுத்த கிடைப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், அழைப்புக்கான பட்டனை தட்டினாலே அதன் மூலமே வாய்ஸ் அழைப்பு அல்லது வீடியோ அழைப்பு ஆகியவற்றை அதனுள் தேர்வு செய்யும் வசதி பிசினஸ் கணக்குகளில் கொண்டு வரப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்