துப்பாக்கிச்சூடு வழக்கு: நாளை ஆஜராவாரா நடிகர் ரஜினிகாந்த்?

 

துப்பாக்கிச்சூடு வழக்கு: நாளை ஆஜராவாரா நடிகர் ரஜினிகாந்த்?

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து ஒரு சில நாட்களில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், சமூக விரோதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறினார்.

துப்பாக்கிச்சூடு வழக்கு: நாளை ஆஜராவாரா நடிகர் ரஜினிகாந்த்?

ரஜினி கூறிய இந்த கருத்து சர்ச்சையை கிளப்பிய நிலையில், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கடந்த பிப். மாதம் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியது. அதன் படி, ரஜினியும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து, ஜன.19ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு அவருக்கு முன் சம்மன் அனுப்பப்பட்டது. ஏற்கனவே அவர் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது ஏன்? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.

இந்த நிலையில், தூப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்திடம் நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது. அவர் நாளை ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 24வது கட்ட விசாரணையை தொடங்கியுள்ள அருணா ஜெகதீசன் 56 பேரை விசாரிக்க திட்டமிட்டுள்ளார் குறிப்பிடத்தக்கது.