Home தமிழகம் 8 வழி சாலை விவகாரம்: சுற்றுச் சூழலுக்கு எதிராக செயல்படும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்! - ராமதாஸ் வேதனை

8 வழி சாலை விவகாரம்: சுற்றுச் சூழலுக்கு எதிராக செயல்படும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்! – ராமதாஸ் வேதனை

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பணியை விட்டுவிட்டு சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்துவதில் நெடுஞ்சாலைத்துறையை விட அதிக ஆர்வம் காட்டுகிறது என்று டாக்டர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

8 வழி சாலை விவகாரம்: சுற்றுச் சூழலுக்கு எதிராக செயல்படும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்! - ராமதாஸ் வேதனை

8 வழி சாலை விவகாரம்: சுற்றுச் சூழலுக்கு எதிராக செயல்படும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்! - ராமதாஸ் வேதனை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பாக, அந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க அனுமதி பெற வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்தப் புதிய நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

8 வழி சாலை விவகாரம்: சுற்றுச் சூழலுக்கு எதிராக செயல்படும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்! - ராமதாஸ் வேதனை

சென்னை- சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க அனுமதி பெறாமல், பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தாமல் நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என்று கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுமட்டுமின்றி, 8 வழிச்சாலை திட்டத்திற்கான திட்ட அறிக்கையையும் ரத்து செய்து உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. அதை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

8 வழி சாலை விவகாரம்: சுற்றுச் சூழலுக்கு எதிராக செயல்படும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்! - ராமதாஸ் வேதனை
அந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், ‘2006-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களுக்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான் ஒப்புதல் வழங்க வேண்டும். அதேநேரத்தில் எந்த ஒரு திட்டத்திற்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அனுமதி பெற்ற பிறகு தான் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை’ என்று கூறப்பட்டிருக்கிறது. சென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தைச் செயல்படுத்த அப்பட்டமாக ஆதரவு அளிக்கும் நிலைப்பாடு இதுவாகும். இது சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்திற்கே எதிரானது.
உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் வாதிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அதற்கு நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு தனி நடைமுறை இருப்பதாகவும், அதனால் நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதி தேவையில்லை என்றும் வாதிட்டார். ஆனால், மத்திய சுற்றுச்சூழல் துறையோ அதையும் தாண்டி, 8 வழிச்சாலைக்கு மட்டுமல்ல… மற்ற திட்டங்களுக்கும் கூட நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதி பெறத் தேவையில்லை என்று கூறியிருக்கிறது.
இந்தியாவின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதுதான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பணி ஆகும். ஆனால், சுற்றுச்சூழல் அமைச்சகமோ அதற்கு மாறாக, சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்துவதில் நெடுஞ்சாலைத்துறையை விட அதிக ஆர்வம் காட்டுகிறது. இது வேலியே பயிரை மேயும் செயலாகும்.

8 வழி சாலை விவகாரம்: சுற்றுச் சூழலுக்கு எதிராக செயல்படும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்! - ராமதாஸ் வேதனை
இதே வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற போதும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் ஒரு தரப்பாக சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போது இது தொடர்பாக எந்த நிலைப்பாட்டையும் எடுக்காத மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், இப்போது முற்றிலும் புதிய நிலைப்பாட்டை எடுத்திருப்பது இத்திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இழைக்கும் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் ஆகும்.
8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கு எல்லையில்லாத பாதிப்பு ஏற்படும். அதனால் தான் இந்த திட்டத்தை பாமக கடுமையாக எதிர்த்து வருகிறது. இதை உணர்ந்து 8 வழிச்சாலை தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய பதில் மனுவை சுற்றுச்சூழல் அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடர்ந்து கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
சென்னையிலிருந்து சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும். அதனால் இந்தத் திட்டத்தை பாமக தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும். விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்” என்று கூறியுள்ளார்.

8 வழி சாலை விவகாரம்: சுற்றுச் சூழலுக்கு எதிராக செயல்படும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்! - ராமதாஸ் வேதனை
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தருமபுரி அருகே முதிய தம்பதி மர்மமான முறையில் உயிரிழப்பு!

தருமபுரி தருமபுரி அருகே வீட்டில் தனியாக இருந்த முதிய தம்பதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி...

மாலை 2ஆம் அமைச்சரவைக் கூட்டம்… அதிமுகவின் முறைகேடுகளை தோண்டியெடுக்க முதல்வர் முடிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாளாக நடைபெற்ற கூட்டம் இன்றோடு முடிவடைகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு பதிலுரை வழங்கினார். இச்சூழலில் தற்போது...

‘சரிந்தது தங்கம் விலை’… இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. பொதுமுடக்கக் காலத்தில் தொழில்துறையில் நிலவும் தேக்கத்தால் தங்கம் விலை பன்மடங்கு உயரும். அதாவது, முதலீட்டாளர்கள் தங்களது...

சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்கலாம்!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது ரயில், பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கின. பிறகு, அத்தியாவசிய பணியாளர்களுக்காக மட்டுமே சென்னை புறநகர் ரயில்கள்...
- Advertisment -
TopTamilNews