darbar
  • January
    26
    Sunday

Main Area

Main



'தொழிலில் போட்டி இருக்கலாம் ஆனா பொறாமை இருக்கக் கூடாது'.. நகைக்கடை ஓனரின் நூதன போஸ்டர்!

poster
poster

பொதுவாக கம்பெனிகளுக்கோ அல்லது கடைகளுக்கோ வேலைக்கு  ஆட்கள் தேவை என்றால் நோட்டீஸ் அடித்து தெருக்களில் ஓட்டுவது வழக்கம். அந்த நோட்டீஸில் கடை விவரங்கள், ஊதியம், முகவரி, லேண்ட் மார்க் என அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதே போல, அந்தியூரில் செயல்பட்டு வரும் நகைக்கடை ஒன்றின் போஸ்டரில் குறிப்பிடப் பட்டிருந்த லேண்ட்மார்க் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

tthn

அந்தியூர், ராஜவீதியில் செயல்பட்டு வரும் ஏ.எஸ்.எம் சுப்ரமணியா தங்கம் மற்றும் வெள்ளி நகைக் கடையில் வேலை செய்வதற்குப் பெண்கள் தேவை என்று அந்த கடையின் உரிமையாளர் போஸ்டர் அடித்துள்ளார். அதில், பெண்களின் கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு என்றும் கல்வித் தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் கீழே, அந்த கடையின் லேண்ட் மார்க் புது விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ttthn

அதாவது, "ராஜவீதி போலீஸ் ஸ்டேஷன் வழி வரும்போது முன் கடைக்காரர் நம் கடை தெரியாமல் இருக்க போர்டு வைத்து மறைத்திருப்பார். மறைவு தாண்டி வரவும்." என்று அச்சிடப்பட்டுள்ளது. தொழிலில் போட்டி இருக்கலாம் ஆனால் பொறாமை இருக்கக் கூடாது என்று குறிப்பால் உணர்த்தும் படி இவர் அடித்திருக்கும் போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது.  
 

2018 TopTamilNews. All rights reserved.