‘100 சவரன் தங்கம், நிலவுக்கு டூர், ஐ-போன் இலவசம்’.. சுயேட்சை வேட்பாளரின் ‘அட டேய்’ அறிவிப்பு!

 

‘100 சவரன் தங்கம், நிலவுக்கு டூர், ஐ-போன் இலவசம்’.. சுயேட்சை வேட்பாளரின் ‘அட டேய்’ அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. ஆட்சியை பிடிக்க மக்களில் காலில் விழுவதற்கு கூட தயங்காத வேட்பாளர்கள், வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் மக்களுடன் சேர்ந்து உரையாடுவது, டீ குடிப்பது, நடனமாடுவது, துணி துவைப்பது போன்ற வழக்கமான அரசியல் நாடகங்களையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

‘100 சவரன் தங்கம், நிலவுக்கு டூர், ஐ-போன் இலவசம்’.. சுயேட்சை வேட்பாளரின் ‘அட டேய்’ அறிவிப்பு!

இந்த நிலையில், மதுரையில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் ‘வேற லெவல்’ வாக்குறுதிகள் இணைய தளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதில்,’ மக்கள் அனைவர்க்கும் ஐ போன் போன் வழங்கப்படும், நீச்சல் குளம் வசதியுடன் மூன்று மாடி வீடு கட்டித்தரப்படும், வீடு ஒன்றிற்கு வருடம் ஒரு கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும், அனைத்து வீட்டுக்கும் 20 லட்சம் மதிப்பு கார் வழங்கப்படும், ஒவ்வொரு வீட்டுக்கும் சிறிய வகை ஹெலிகாப்டர் வழங்கப்படும், இல்லத்தரசிகளுக்கு வேலை செய்ய ரோபோ வழங்கப்படும், பெண்களின் திருமணத்திற்கு 100 சவரன் தங்க நகைகள் வழங்கப்படும்.

‘100 சவரன் தங்கம், நிலவுக்கு டூர், ஐ-போன் இலவசம்’.. சுயேட்சை வேட்பாளரின் ‘அட டேய்’ அறிவிப்பு!

இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 10 லட்சம் வழங்கப்படும், கால்வாய்கள் வெட்டி வீட்டுக்கு ஒரு படகு வழங்கப்படும், 100 நாட்கள் பயணமாக நிலவுக்கு அழைத்துச் செல்லப்படும், தொகுதி சில்லாக இருக்க 300 அடி உயர செயற்கை பனிமலை உருவாக்கப்படும், தொகுதியில் விண்வெளி ஆராய்ச்சி மையமும் ராக்கெட் ஏவுதளமும் அமைக்கப்படும் என சும்மா வாக்குறுதிகளை அடித்து விட்டிருக்கிறார்.

இவர் கொடுத்திருக்கும் ஒரு வாக்குறுதிகளுள் ஒன்று கூட நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. தேர்தலில் இவர் வாக்குகளை பெறுகிறாரோ..இல்லையோ.. வாக்குறுதிகள் மூலமாகவே மக்கள் மத்தியில் ஃபேமஸ் ஆகிவிட்டார்…!