அதிர்ச்சி தந்த பா.ஜ.க வேட்பாளரின் சொத்து மதிப்பு! – வாயடைத்துப் போன தேர்தல் அதிகாரி

 

அதிர்ச்சி தந்த பா.ஜ.க வேட்பாளரின் சொத்து மதிப்பு! – வாயடைத்துப் போன தேர்தல் அதிகாரி

கர்நாடக சட்ட மேலவைக்கான தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரின் சொத்து மதிப்பைக் கேட்டு தேர்தல் அதிகாரி உள்ளிட்டவர்கள் வாயடைத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டமேலவைத் தேர்தல் வருகிற 29ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க சார்பில் எம்.டி.பி.நாகராஜ் என்பவர் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்த அவர் தன்னுடைய சொத்து மதிப்பையும் தாக்கல் செய்தார். அதில் அவர் தனக்கு ரூ.1,224 கோடி சொத்து உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

அதிர்ச்சி தந்த பா.ஜ.க வேட்பாளரின் சொத்து மதிப்பு! – வாயடைத்துப் போன தேர்தல் அதிகாரி தன்னுடைய பெயரில் ரூ.884 கோடியும் தன் மனைவி சாந்தகுமாரி பெயரில் ரூ.331 கோடியும் வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தன் மனைவியிடம் 1.48 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் இருப்பதாகவும் தன்னிடம் ரூ.2.23 கோடி மதிப்பிலான நகைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரூ.2.48 கோடி மதிப்பில் ஐந்து கார்களை வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பா.ஜ.க-வின் கோடீஸ்வர வேட்பாளர் நாகராஜின் சொத்து மதிப்பைக் கேட்டு தேர்தல் அதிகாரிகள் மட்டுமின்றி பொது மக்களும் அதிர்ச்சியடைந்தனர்.