எஸ். ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் பொருளாளராக நான் இல்லை- விஜயின் தாய்

 

எஸ். ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் பொருளாளராக நான் இல்லை- விஜயின் தாய்

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் விஜய் தனது கட்சியைப் பதிவு செய்துள்ளார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியானது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்தக் கட்சிக்கு தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா ஆகியோரின் பெயர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

எஸ். ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் பொருளாளராக நான் இல்லை- விஜயின் தாய்

இதுகுறித்து விளக்கமளித்த எஸ்.ஏ சந்திரசேகர் அது விஜய் உடைய கட்சி அல்ல, என்னுடைய கட்சி, விஜய்க்கும் அந்த கட்சிக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்தார். அதேபோல் நடிகர் விஜய், தன் பெயரையோ புகைப்படத்தையோ தனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இந்நிலையில் நடிகர் விஜயின் தாய் ஷோபா தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “எஸ். ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் பொருளாளராக நான் இல்லை, விலகிவிட்டேன். கட்சி தொடங்குவது பற்றி எதுவும் சொல்லாமல் எனது கணவர் கையெழுத்து வாங்கிக்கொண்டார். அரசியல், கட்சி குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம் என சொல்லிய பின்பும் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதால் அவருடன் விஜய் பேசுவதில்லை. எதிர்காலத்தில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விஜய்தான் முடிவெடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.