அமைச்சர் பதவி கொடுத்தாச்சு… யாருக்கு என்ன துறை கொடுக்க?…. உச்சகட்ட குழப்பத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங்

அமைச்சர் பதவி கொடுத்தாச்சு… யாருக்கு என்ன துறை கொடுக்க?…. உச்சகட்ட குழப்பத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங்

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அண்மையில் தனது அமைச்சரவை 2வது முறையாக விரிவாக்கம் செய்தார். அப்போது புதிதாக 28 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் சிந்தியா ஆதரவாளர்கள் 12 பேரும் அடங்குவர். பலர் அதிகாரமிக்க துறைகளை எதிர்பார்ப்பதால் தற்போது அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு செய்வதில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

அமைச்சர் பதவி கொடுத்தாச்சு… யாருக்கு என்ன துறை கொடுக்க?…. உச்சகட்ட குழப்பத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங்

இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் டெல்லி கிளம்பி சென்றார். அங்கு பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுடன் புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். ஆனால் இன்னும் துறை ஒதுக்கீடு செய்வதில் முடிவு எட்டப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர் பதவி கொடுத்தாச்சு… யாருக்கு என்ன துறை கொடுக்க?…. உச்சகட்ட குழப்பத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங்

முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் நேற்று அம்மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் அந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கு அமைச்சர்களுக்கு இன்னும் துறைகள் ஒதுக்கீடு செய்யபடாததுதான் காரணம் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.