ஏழை மாணவர்களுக்கு மாமா மற்றும் பா.ஜ.க. கல்லூரி கட்டணத்தை கொடுக்கும்.. சிவ்ராஜ் சிங் சவுகான்

ஏழை மாணவர்களுக்கு மாமா மற்றும் பா.ஜ.க. கல்லூரி கட்டணத்தை கொடுக்கும்.. சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தில், ஏழை மாணவர்கள் மருத்துவம் அல்லது பொறியியல் கல்லூரிகளில் படிக்க விரும்பினாலும், மாமா மற்றும் பா.ஜ.க. கல்லூரி கட்டணத்தை கொடுக்கும் என முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

மத்திய பிரதேசம் டாடியாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசுகையில் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஜி சுய சார்பு கனவு கண்டார். பிரதமர் மோடியின் அதிசயமான தலைமையே அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பிரம்மாண்ட கோயில் கட்டுமானம் தொடங்கியது. பிரதமர் மோடியின் தலைமையே காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.

ஏழை மாணவர்களுக்கு மாமா மற்றும் பா.ஜ.க. கல்லூரி கட்டணத்தை கொடுக்கும்.. சிவ்ராஜ் சிங் சவுகான்
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

நீங்கள் எதை பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. தற்போது இது நமது அரசாங்கம், கமல் நாத்தின் அரசாங்கம் அல்ல. ஏழை மக்கள் கவலைபட வேண்டிய அவசியமில்லை. உணர்வுபூர்வமாக படியுங்க, நீங்க எங்கு படிக்க விரும்பினாலும் அது மருத்துவம் அல்லது பொறியியல் கல்லூரியாக இருந்தாலும் உங்க மாமா (சிவ்ராஜ் சவுகான்) மற்றும் பா.ஜ.க. கல்லூரி கட்டணத்தை வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏழை மாணவர்களுக்கு மாமா மற்றும் பா.ஜ.க. கல்லூரி கட்டணத்தை கொடுக்கும்.. சிவ்ராஜ் சிங் சவுகான்
மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள்

மத்திய பிரதேச மக்கள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை மாமா என்று அன்பாக அழைப்பார்கள். மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. முடிவுகள் 10ம் தேதி வெளிவருகிறது. இந்த இடைத்தேர்தல் பா.ஜ.க.வுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.