மத்திய பிரதேசத்தின் கஜானா அவுரங்கசீப்பின் புதையல் அல்ல.. வளர்ச்சிக்காக செலவிட்டால் காலியாகும்..சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தின் கஜானா அவுரங்கசீப்பின் புதையல் அல்ல.. வளர்ச்சிக்காக செலவிட்டால் காலியாகும்..சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தன் கஜானா (கருவூலம்) அவுரங்கசீப்பின் புதையல் அல்ல. அதனை வளர்ச்சிக்காக செலவிட்டால் காலியாக்க முடியும் என்று கமல் நாத்துக்கு முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பா.ஜ.க.வும், எதிர்க்கட்சியான காங்கிரசும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக உள்ளன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல் நாத் அண்மையில், மத்திய பிரதேச அரசின் கஜானாவை மாமா (சிவ்ராஜ் சிங் சவுகான்) காலியாகி விட்டார் என்று குற்றம் சாட்டி இருந்தார்.

மத்திய பிரதேசத்தின் கஜானா அவுரங்கசீப்பின் புதையல் அல்ல.. வளர்ச்சிக்காக செலவிட்டால் காலியாகும்..சிவ்ராஜ் சிங் சவுகான்
முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஒன்றான அனுப்புரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசுகையில் கமல் நாத்தின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் கமல் நாத் அல்ல. அபிவிருத்திக்காக அவர் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. அனுப்புரின் வளர்ச்சிக்கு நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன். மாமா அரசின் கஜானாவை காலியாக்கி விட்டார் என்று கமல் நாத் சொல்கிறார். ஆனால் அது (அரசு கருவூலம்) அவுரங்கசீப்பின் புதையல் அல்ல, வளர்ச்சிக்காக செலவிட்டால் அதனை காலியாக்கலாம்.

மத்திய பிரதேசத்தின் கஜானா அவுரங்கசீப்பின் புதையல் அல்ல.. வளர்ச்சிக்காக செலவிட்டால் காலியாகும்..சிவ்ராஜ் சிங் சவுகான்
கமல் நாத்

முன்பு சின்ன நாடுகள் நமக்கு சவால் விட்டன, ஆனால் நமது முன்னாள் பிரதமர்கள் ஒருபோதும் எதிர்வினையாற்றவில்லை. ஆனால் இன்று சீனா நம் எல்லைகளில் கண்களை வைக்க துணிந்தால், நமது வீரர்கள் அவர்களது வீரர்களின் கழுத்தை உடைத்து அவர்களை தூக்கி எறிந்தனர். இப்போது சீனாவுக்கு நம்மிடம் கண்ணை (கோபப்பார்வை) காட்ட தைரியம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.