மோடி தடுப்பூசி போட்டதை சந்தேகப்படுபவர்கள் சின்ன புத்தி உடையவர்கள்.. அவர் தனக்காக வாழவில்லை.. சிவ்ராஜ் சிங் சவுகான்

மோடி தடுப்பூசி போட்டதை சந்தேகப்படுபவர்கள் சின்ன புத்தி உடையவர்கள்.. அவர் தனக்காக வாழவில்லை.. சிவ்ராஜ் சிங் சவுகான்

பிரதமர் மோடி தடுப்பூசி போட்டு கொண்டதை சந்தேகப்படுபவர்கள் சின்ன புத்தி உடையவர்கள் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டினார்.

60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் தொடங்கியது. கொரோனா தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவிட் தடுப்பூசியை போட்டு கொண்டார். பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். மோடி தடுப்பூசி போட்டு கொண்டது தொடர்பாக ஒரு சிலர் சந்தேகத்தை எழுப்பினர்.

மோடி தடுப்பூசி போட்டதை சந்தேகப்படுபவர்கள் சின்ன புத்தி உடையவர்கள்.. அவர் தனக்காக வாழவில்லை.. சிவ்ராஜ் சிங் சவுகான்
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

இதற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பதிலடி கொடுத்துள்ளார். சிவ்ராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடிக்கு போடப்பட்ட தடுப்பூசி குறித்து சந்தேகம் எழுப்பும் நபர்கள் சிறிய மனப்பான்மை உடையவர்கள். அவர்கள் பொது சுகாதார விஷயத்தில் அரசியல் செய்கிறார்கள். அவர்கள் பிரதமரை குற்றம் சாட்டுவது மட்டுமல்லாமல், நாட்டு மக்களுக்கும் கூட தீங்கு விளைவிக்கிறார்கள்.

மோடி தடுப்பூசி போட்டதை சந்தேகப்படுபவர்கள் சின்ன புத்தி உடையவர்கள்.. அவர் தனக்காக வாழவில்லை.. சிவ்ராஜ் சிங் சவுகான்
கோவிட்-19 தடுப்பூசி

இது போன்ற கருத்துக்களை வெளியிடுவதன் மூலம், தொற்றுநோயை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அவர்கள் சிரமங்களை ஏற்படுத்துகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. பிரதமர் தனக்காக வாழவில்லை. அவருடைய முழு வாழ்க்கையும் தேசத்திறக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நமது பிரதமர் தனது முறை வரும் வரை காத்திருந்த விதம் நமது மதிப்புகளின் பிரதிநிதித்துவமாகும். நாளை (இன்று) நான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.