கமல் நாத் அரசு ஏன் கவிழ்ந்தது தெரியுமா? ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் புது தகவல்..

 

கமல் நாத் அரசு ஏன் கவிழ்ந்தது தெரியுமா? ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் புது தகவல்..

மத்திய பிரதேசத்தில் தனது வளர்ச்சி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது என அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் கடந்த 2018ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் கமல் நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால் அந்த கட்சியில் அப்போது இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும், முதல்வர் கமல்நாத்துக்கும் இடையிலான மோதல் காரணமாக அடுத்த 18 மாதங்களுக்குள் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க.வில் இணைந்ததே இதற்கு காரணம்.

கமல் நாத் அரசு ஏன் கவிழ்ந்தது தெரியுமா? ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் புது தகவல்..
கமல் நாத்

காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடித்தது. மத்திய பிரதேசத்தில் டப்ராவில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசுகையில், கமல்நாத் முதலமைச்சராக இருந்தபோது மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இது ஜோதிராதித்ய சந்தியாவுக்கும் மட்டுமல்ல குவாலியர் மற்றும் சம்பல் மக்களுக்கும் அவமானம்.

கமல் நாத் அரசு ஏன் கவிழ்ந்தது தெரியுமா? ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் புது தகவல்..
ஜோதிராதித்ய சிந்தியா

அதன்பிறகுதான் அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் வீழ்ச்சி கண்டது. தப்ராவின் வளர்ச்சிக்காக மாநில அமைச்சரவை ரூ.335 கோடி அனுமதி அளித்துள்ளது. மேம்பாட்டு பணிகளை விவசாயிகள் இழக்கள் விடமாட்டோம். அவர்களுக்கு ரூ.31 கோடி வழங்குவோம். அவர்களுக்கு போதுமான மின்சாரம் கிடைக்கும். மாணவர்களுக்கு லேப்டாப் விநியோகம் செய்வோம். சிவபூரி மாவட்டம் பிச்சோரில் ஒரு கல்லூரி திறக்கப்படும். ஜோதிராதித்ய சிந்தியாவின் வேண்டுகோளான லடெரா திட்டமும் தொடங்கப்படும் என தெரிவித்தார்.