சிக்கலான நிபந்தனைகளை விதித்து விவசாயிகளின் முதுகில் குத்தி விட்டார் கமல் நாத்… சிவ்ராஜ் சிங் சவுகான்

சிக்கலான நிபந்தனைகளை விதித்து விவசாயிகளின் முதுகில் குத்தி விட்டார் கமல் நாத்… சிவ்ராஜ் சிங் சவுகான்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறிவிட்டு சிக்கலான நிபந்தனைகள விதித்து விவசாயிகளின் முதுகில் குத்தி விட்டார் என்று முன்னாள் முதல்வர் கமல் நாத்தை இந்நாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டினார்.

மத்திய பிரதேசத்தில் காலியாக 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் குறிப்பாக பா.ஜ.க.வும், காங்கிரசும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மோரினாவில் பா.ஜ.க. சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:

சிக்கலான நிபந்தனைகளை விதித்து விவசாயிகளின் முதுகில் குத்தி விட்டார் கமல் நாத்… சிவ்ராஜ் சிங் சவுகான்
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

ஒவ்வொருவருக்கும் ரூ.2 லட்சம் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்வோம் என்று சொல்லி கமல் நாத் விவசாயிகளின் முதுகில் குத்தி விட்டார். ஆனால் உண்மையில் தள்ளுபடி செய்வதற்கு தகுதி பெறுவதற்கு சிக்கலான நிபந்தனைகளை வைத்தார். இது பொதுமக்களை மோசடி செய்வதல்லவா. வட்டி செலுத்துவதால் விவசாயிகள் சுமையில்லாமல் இருப்பதை உறுதி செய்வேன், அதேநேரம் வங்கிகளின் நிதி நிலை பாதிக்கப்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிக்கலான நிபந்தனைகளை விதித்து விவசாயிகளின் முதுகில் குத்தி விட்டார் கமல் நாத்… சிவ்ராஜ் சிங் சவுகான்
கமல் நாத்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான கமல் நாத் நேற்று முன்தினம் டிவிட்டரில், மாநிலத்தில் சிவ்ராஜ் சிங் சவுகான் அரசு திரும்பியவுடன், மதுபான மாபியா, கடத்தல் மாபியா, குற்ற மாபியா, நில மாபியா, போதை மாபியா என அனைத்து வகையான மாபியாக்களும் மீண்டும் செயலுக்கு வந்து விட்டன என பதிவு செய்து இருந்தார்.