ராகுல் காந்தி கூறிய பிறகும் மன்னிப்பு கேட்க மறுக்கும் கமல் நாத்.. மத்திய பிரதேசத்தை லவ் பண்ணுங்க.. சிவ்ராஜ் சிங் சவுகான்

ராகுல் காந்தி கூறிய பிறகும் மன்னிப்பு கேட்க மறுக்கும் கமல் நாத்.. மத்திய பிரதேசத்தை லவ் பண்ணுங்க.. சிவ்ராஜ் சிங் சவுகான்

ராகுல் காந்தி கூறிய பிறகும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் கமல் நாத்திடம், மத்திய பிரதேசத்தை லவ் பண்ணுங்க என்று முதல்வர் சிவ்ராஜ் சிங் அட்வைஸ் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல் நாத் கடந்த சில தினங்களுக்கு முன் பா.ஜ.க. வேட்பாளர் இமார்டி தேவியை அயிட்டம் என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் கமல் நாத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் மவுன போராட்டம் நடத்தினர் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தனர். ஆனால் தான் பா.ஜ.க. பெண் வேட்பாளரை அவமதிக்கும் வகையில் பேசவில்லை, அந்த வார்த்தையை பல சூழ்நிலைகளில் பயன்படுத்தலாம் என முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கமல் நாத் கடிதம் எழுதினார்.

ராகுல் காந்தி கூறிய பிறகும் மன்னிப்பு கேட்க மறுக்கும் கமல் நாத்.. மத்திய பிரதேசத்தை லவ் பண்ணுங்க.. சிவ்ராஜ் சிங் சவுகான்
கமல் நாத்

இதற்கிடையே கமல் நாத் கருத்து குறித்து ராகுல் காந்தி கூறுகையில், கமல் நாத் ஜி எனது கட்சியை சேர்ந்தவர், ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் பயன்படுத்திய மொழி (வார்த்தை) எனக்கு பிடிக்கவில்லை. நான் இத்தகைய போக்கை ஆதரிக்கவில்லை இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்தார். ராகுல் காந்தி இப்படி கூறிய பிறகும் கமல் நாத், அது அவருடைய தனிப்பட்ட கருத்து, யாரையும் அவமரியாதையாக பேசாத போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

ராகுல் காந்தி கூறிய பிறகும் மன்னிப்பு கேட்க மறுக்கும் கமல் நாத்.. மத்திய பிரதேசத்தை லவ் பண்ணுங்க.. சிவ்ராஜ் சிங் சவுகான்
ராகுல் காந்தி

இந்த சூழ்நிலையில் கமல் நாத் எழுதிய கடிதத்துக்கு முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அவருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மத்திய பிரதேசத்தையும், அதன் மக்களையும் நேசிக்க கற்றுக்கொள்ளுங்க கமல் நாத் ஜி. நீங்கள் மத்திய பிரதேசத்தை சேராதவராக இருந்தாலும், உங்களை இங்கு உள்ள மக்கள் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். எனவே மாநிலவாசிகளின் நலன்களை பற்றி சிந்திக்க வேண்டியது உங்கள் கடமையாகும். மத்திய பிரதேசத்தை கொள்ளையடிப்பதற்கான ஆதாரமாக மாற்றி, உங்கள் சொந்த நலன்களுக்கும், உங்கள் கட்சி நலனுக்கும் சேவை செய்தீர்கள் இது இனி ஒருபோதும் நடக்காது. இதை நீங்கள் கருத்தில் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என அதில் தெரிவித்து இருந்தார்.