முதல்ல அமைச்சர்… அடுத்து முதல்வர்… கமல்நாத் இடைவிடாமல் தாக்கும் பா.ஜ.க. தலைவர்கள்

 

முதல்ல அமைச்சர்… அடுத்து முதல்வர்… கமல்நாத் இடைவிடாமல் தாக்கும் பா.ஜ.க. தலைவர்கள்

கொரோனா இறப்புகளை வைத்து காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத்தை அற்ப அரசியலில் ஈடுபடுகிறார் என்று ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தாக்கினார்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல் நாத், இந்திய உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி பயப்படுகிறார். கொரோனா வைரஸ் 2வது அலையில் மத்திய பிரதேசத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்து இருப்பார்கள். ஆனால் மாநில அரசு கொரோனா இறப்பை குறைத்து காட்டுகிறது என குற்றம் சாட்டினார். கமல் நாத்தின் இந்த கருத்துக்கு மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம், ஆதாரம் இருந்தால் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் கமல்நாத் பதவி விலக வேண்டும் என பதிலடி கொடுத்தார்.

முதல்ல அமைச்சர்… அடுத்து முதல்வர்… கமல்நாத் இடைவிடாமல் தாக்கும் பா.ஜ.க. தலைவர்கள்
கமல் நாத்

தற்போது மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது: முன்னாள் முதல்வர் கமல் நாத் இந்தியாவின் மனஉறுதியை உடைக்க முயற்சி செய்கிறார். என் பாரத கோவிட், இந்திய கொரோனா போன்ற வார்த்தைகள் காங்கிரஸ், கமல் நாத் மற்றும் சோனியா காந்திக்கு பொருந்துமா? கமல் நாத் ஜி நீங்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் அற்ப அரசியல் செய்கிறீர்கள். இது போன்ற அறிக்கைகளுடன் மற்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் மனவுறுதியை உடைக்க முடியாது. இந்த அறிக்கை தேசதுரோகமல்லவா?

முதல்ல அமைச்சர்… அடுத்து முதல்வர்… கமல்நாத் இடைவிடாமல் தாக்கும் பா.ஜ.க. தலைவர்கள்
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

சோனியா காந்தியிடம் இது போன்ற பேசும் தலைவர்களுக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா? என்று கேட்க விரும்புகிறேன். இந்த சிக்கலான காலத்திலிருந்து மாநிலத்தை வெளியேற்ற நாங்கள் இரவு பகலாக பணியாற்றி வருகிறோம். நீங்கள் கோவிட் மரணங்களுடன் மோசமான அரசியல் செய்கிறீர்கள். ஒவ்வொரு மரணமும் துக்கத்துக்கு ஒரு காரணம். ஆனால் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் எந்தவொரு மரணமும் ஏற்படவில்லை. வெளிநாடுகளில் எந்தவொரு இறப்புகளும் நிகழவில்லையா?. மத்திய பிரதேசத்தில் கோவிட்-19 பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.