விஸ்வரூபம் எடுக்கும் லவ் ஜிஹாத்.. திருமணம் வாயிலாக மத மாற்றம் செய்வதற்கு எதிராக சட்டம்… ம.பி. அரசு முடிவு

விஸ்வரூபம் எடுக்கும் லவ் ஜிஹாத்.. திருமணம் வாயிலாக மத மாற்றம் செய்வதற்கு எதிராக சட்டம்… ம.பி. அரசு முடிவு

லவ் ஜிஹாத் பிரச்சினை விஸ்ரூபம் எடுக்க தொடங்கியதையடுத்து, திருமணம் வாயிலாக ஒருவரை மத மாற்றம் செய்ய சதி செய்பவர்களுக்கு எதிராக ஒரு புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெண்ணை வேறொரு மதத்தை சேர்ந்த நபர் காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்த பிறகு அந்த பெண்ணை கட்டாயம் மதமாற்றம் செய்வது லவ் ஜிஹாத் என்று சொல்லப்படுகிறது. சமீபகாலமாக லவ் ஜிஹாத் விவகாரம் பெரிதாக வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் லவ் ஜிஹாத் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய பிரதேச அரசு சட்டம் இயற்ற உள்ளது.

விஸ்வரூபம் எடுக்கும் லவ் ஜிஹாத்.. திருமணம் வாயிலாக மத மாற்றம் செய்வதற்கு எதிராக சட்டம்… ம.பி. அரசு முடிவு
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

இது தொடர்பாக மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது: காதல் பெயரில் திருமணம் செய்துகொள்வதன் மூலம் மற்றவர்களின் மதத்தை மாற்ற சதி செய்பவர்களுக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் கடுமையான சட்டத்தை கொண்டு வருகிறோம். இதை (லவ் ஜிஹாத்) நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். நாங்கள் நடைமுறையை தொடங்கியுள்ளோம். இந்த சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும்.

விஸ்வரூபம் எடுக்கும் லவ் ஜிஹாத்.. திருமணம் வாயிலாக மத மாற்றம் செய்வதற்கு எதிராக சட்டம்… ம.பி. அரசு முடிவு
பட்டாசுகள்

இந்த தீபாவளியில் சுதேசி பட்டாசுகளை மட்டுமே விற்பனை மற்றும் வெடியுங்கள் என்று அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன். கடவுள் படங்களுடன் பட்டாசுகளை விற்பனை அல்லது பயன்படுத்தும் எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். மக்கள் வேறு யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.