தொழிலாளர்களை மீட்க நடிகரிடம் உதவி கேட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ…. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை கலாய்த்த காங்கிரஸ்

 

தொழிலாளர்களை மீட்க நடிகரிடம் உதவி கேட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ…. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை கலாய்த்த காங்கிரஸ்

மத்திய பிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜேந்திர சுக்லா, மும்பையில் சிக்கி தவிக்கும் தனது மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பு உதவுமாறு டிவிட்டர் வாயிலாக பாலிவுட் நடிகர் சோனு சூட்டிடம் உதவி கேட்டார். இதற்கு நடிகர் சோனு சூட், உங்கள் புலம்பெயர்ந்த சகோதரர்கள் நாளை உங்களிடம் அனுப்பப்படுவார்கள், சார். நான் எப்போதாவது எம்.பி.க்கு (மத்திய பிரதேசம்) வந்தால் எனக்கு போஹாவை வழங்குங்கள் என பதில் அனுப்பி இருந்தார்.

தொழிலாளர்களை மீட்க நடிகரிடம் உதவி கேட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ…. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை கலாய்த்த காங்கிரஸ்

மத்திய பிரதேசத்திலும், மத்தியிலும் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் சூழ்நிலையில் தனது மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு திரும்ப அனுப்புவதற்காக பாலிவுட் நடிகரிடம் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜேந்திர சுக்லா உதவி கேட்டதை பலரும் விமர்சனம் செய்தனர். குறிப்பாக காங்கிரஸ் இந்த விவகாரத்தில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை குறிவைத்து விமர்சனம் செய்துள்ளது.

தொழிலாளர்களை மீட்க நடிகரிடம் உதவி கேட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ…. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை கலாய்த்த காங்கிரஸ்

ம.பி. காங்கிரசின் முன்னாள் தலைவர் அருண் யாதவ் இது தொடர்பாக டிவிட்டரில், ராஜேந்திர சுக்லாவின் இந்த டிவிட் மத்திய பிரதேசத்தின் கசப்பான உண்மையை வெளிப்படுத்துகிறது. பாருங்க சிவ்ராஜ் (சவுகான்), முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய ரேவா சட்டப்பேரவை தொகுதி பா.ஜ.க. எம்.எம்.ஏ.வால் உங்க அரசாங்கத்தை நம்ப முடியவில்லை. அப்புறம் மும்பையில் சிக்கிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்பதற்காக நடிகர் சோனு சூட்டிடம் உதவி பெறுகிறார் என பதிவு செய்து இருந்தார். இதற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜேந்திர சுக்லா, மத்திய மற்றும் மாநில அரசும் லட்ச கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைத்து வந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தங்களது வீட்டுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.