மத்திய பிரதேச அரசியலை கலக்கும் தேங்காய்… கமல் நாத்துக்கு பதிலடி கொடுத்த சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேச அரசியலை கலக்கும் தேங்காய்… கமல் நாத்துக்கு பதிலடி கொடுத்த சிவ்ராஜ் சிங் சவுகான்

என்னுடன் தேங்காயைதான் எடுத்து செல்கிறேன், ஷாம்பெயினை (மது வகை) அல்ல என்று கமல் நாத்துக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல் நாத் அண்மையில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தன்னுடன் ஒரு தேங்காயை எடுத்து செல்கிறார், அதனை உடைத்து, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் என தெரிவித்து இருந்தார். அதாவது தேங்காயை உடைத்து வெற்று வாக்குறுதிகளை கொடுக்கிறார் என சிவ்ராஜ் சிங் சவுகானை கிண்டல் செய்து இருந்தார்.

மத்திய பிரதேச அரசியலை கலக்கும் தேங்காய்… கமல் நாத்துக்கு பதிலடி கொடுத்த சிவ்ராஜ் சிங் சவுகான்
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

கமல் நாத்தின் தேங்காய் கருத்துக்கு சிவ்ராஜ் சிங் சவுகான் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். நம் கலாச்சாரத்தில் தேங்காய் உள்ளது. அது தூய்மை மற்றும் சேவையின் அடையாளம். நான் ஒரு தேங்காயை எடுத்து செல்கிறேன், ஷாம்பெயினை (மது வகை) அல்ல. கமல் நாத் மற்றும் காங்கிரஸ் அரசு நிறுத்தி வைத்திருந்த அபிவிருத்தி பணிகளை நாங்கள் மீண்டும் தொடங்கியுள்ளோம்.

மத்திய பிரதேச அரசியலை கலக்கும் தேங்காய்… கமல் நாத்துக்கு பதிலடி கொடுத்த சிவ்ராஜ் சிங் சவுகான்
கமல் நாத்

கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் போடப்பட்ட 13 ஆயிரம் புதிய சாலைகளை நாங்கள் அண்மையில் தொடங்கினோம். அவர்கள் பணம் இல்லை என்று புகார் சொன்னார்கள். தற்போது நாங்கள் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தேங்காயோடு அவர்களுக்கு (காங்கிரஸ்) பிரச்சினை உள்ளது, அதனால்தான் நான் தேங்காயை எடுத்து செல்வதை எதிர்க்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.