சிவாங்கிக்கு அடித்த ஜாக்பாட்!

 

சிவாங்கிக்கு அடித்த ஜாக்பாட்!

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமான சிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் என்ற படத்தில் இணைந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, தனக்கு பாடல் மட்டுமல்ல நல்ல நகைச்சுவை உணர்வும் உண்டு என்பதை காட்டி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருபவர் சிவாங்கி. இவருக்காகவே இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்போர் ஏராளமானோர். அந்த வகையில் இவரது சிறு டையலாக், சேட்டைகள் கூட சமூக வலைதளங்களில் பிரபலமாகிவிடுகிறது. அந்த அளவிற்கு சிவாங்கிக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர்.

சிவாங்கிக்கு அடித்த ஜாக்பாட்!

இந்நிலையில் அண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், நான் சிவாங்கியின் ரசிகர் எனக் கூறினார். மேலும் டான் படத்தில் சிவாங்கிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி இருப்பது சிவாங்கியின் ரசிகர்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.