சிவசக்தி மயமான ஐப்பசி பௌர்ணமி!

 

சிவசக்தி மயமான ஐப்பசி பௌர்ணமி!

உலகமே சிவசக்தி மயமானது. சிவத்திலிருந்து சக்தியை பிரிக்க முடியாது. சிவசக்தி இருவருக்கும் சிறப்பு வாய்ந்தது ஐப்பசி பௌர்ணமி. இன்று சிவாலயங்களில் உள்ள சிவன் லிங்க மூர்த்திக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். இன்று மறவாமல் சிவன் கோயில்களுக்கு சென்று அம்பிகையையும், சிவப்பெருமானையும் வழிபடுங்கள். உலகத்தை படைத்த உலக நாயகியான அம்பிகையை பௌர்ணமியில் வழிபட வாழ்வில் இருக்கும் இருள் நீங்கி ஒளிமாயமான எதிர்காலம் அமையும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

சிவசக்தி மயமான ஐப்பசி பௌர்ணமி!

பௌர்ணமியில் கட்டாயம் விரதம் இருந்து வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். இதனால் வாழ்வில் சகல வளங்களும் பெறலாம் என்பது ஐதீகம். நம் இயற்கை வழிப்பாட்டின் தொடர்ச்சியாக இன்றளவும் கடைப்பிடிக்கப்படுவது பௌர்ணமி விரதம். இது பௌர்ணமி தினத்தன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இது அம்பிகையின் அருளைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் விரதம். விரத நாளில் காலை முதல் இரவு வரை விரதம் இருந்து, `லலிதா சகஸ்ரநாமம்’ போன்ற தேவி ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும். மாலையில் பௌர்ணமி நிலவு தோன்றியதும், அம்பிகைக்கும் சந்திரனுக்கும் பூஜைகள் செய்து, விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். பெண்களுக்கு என்று பிரத்தியேகமாக அமைந்திருக்கும் பௌர்ணமி விரதத்தைக் கடைப்பிடித்தால், மாங்கல்ய தோஷம் நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும்.

சிவசக்தி மயமான ஐப்பசி பௌர்ணமி!

திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும். ஐப்பசி மாத பௌர்ணமி விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் பசி, பிணிகள் நீங்கும். வெண்பொங்கலும், நெய் பொங்கல் படைத்து அம்பிகைக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும். பௌர்ணமி, முழு நிலவு தரும் பிரகாச ஒளி உங்கள் மனதிலும், வாழ்விலும் ஏற்பட பௌர்ணமியை மறவாமல் தரிசனம் செய்யுங்கள்.

சிவசக்தி மயமான ஐப்பசி பௌர்ணமி!