தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை பிரதமர் மோடி பின்பற்றுவாரா?… சிவ சேனா கேள்வி…

தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை பிரதமர் மோடி பின்பற்றுவாரா?… சிவ சேனா கேள்வி…

ராம ஜென்மபூமி அறக்கட்டளை தலைவர் நிருத்யா கோபால் தாஸ் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 5ம் தேதியன்று அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜையில், 75 வயதான நிருத்யா கோபால் தாஸ், பிரதமர் மோடியுடன் மேடையில் இருந்தார். இதனால் பிரதமர் மோடியின் உடல் நலம் குறித்து கவலை எழுந்தது.

தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை பிரதமர் மோடி பின்பற்றுவாரா?… சிவ சேனா கேள்வி…

இந்த சூழ்நிலையில், நிருத்யா கோபால் தாஸுக்கு கொரோனா இருப்பது உறுதியானதால், பிரதமர் நரேந்திர மோடி தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை கடைப்பிடிப்பாரா என சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது. சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் நேற்று வெளியான கட்டுரையில், 75 வயதான கோபால் தாஸ் ஆகஸ்ட் 5ம் தேதியன்று ராமர் கோயிலின் பூமி பூஜை விழாவின் மேடையில் இருந்தார்.

தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை பிரதமர் மோடி பின்பற்றுவாரா?… சிவ சேனா கேள்வி…

அவர் முகத்தை மாஸ்க்கால் மறைக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோர் தாஸுடன் தொடர்பு கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி நிருத்யா கோபால் தாஸின் கையை பயபக்தியுடன் பிடித்தார். எனவே நமது பிரதமரும் தனிமைப்படுத்தபடுவாரா? என அதில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. நடந்து முடிந்த ராமர் கோயிலின் பூமி பூஜை விழாவுக்கு சிவ சேனா தலைவரும், மகாராஷ்டிரா தலைவருமான உத்தவ் தாக்கரே அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.