அவுரங்கபாத் நகர் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்.. மறைமுகமாக தாக்கிய சிவ சேனா..

அவுரங்கபாத் நகர் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்.. மறைமுகமாக தாக்கிய சிவ சேனா..

மகாராஷ்டிராவில் அவுரங்கபாத் நகர் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸை கூட்டணி கட்சியான சிவ சேனா மறைமுகமாக தாக்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அரசாங்கத்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போது அவுரங்கபாத் நகரின் பெயரை சம்பாஜிநகர் என மறுபெயரிட வேண்டும் என்று சிவ சேனா கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் கூட்டணி கட்சியான காங்கிரஸ் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியை சிவ சேனா மறைமுகமாக தாக்கியுள்ளது.

அவுரங்கபாத் நகர் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்.. மறைமுகமாக தாக்கிய சிவ சேனா..
ரயில் நிலையத்தில் அவுரங்கபாத் பெயரை சம்பாஜிநகர் மாற்றிய நபர்

சிவ சேனா தனது பிரச்சார பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் தனது கூட்டணி கட்சியான காங்கிரஸை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளது. சாம்னாவின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அவுரங்கபாத் பெயரை மாற்றினால் முஸ்லிம் சமுதாயத்தினர் அதாவது சிறுபான்மையினர் அதிருப்தி அடைவார்கள் என்பதால் மதசார்ப்பற்ற கட்சிகளின் வாக்கு வங்கியை பாதிக்கக்கூடும். அதன் மதசார்ப்பற்ற இமேஜ் கேள்விக்குறியாகும்.

அவுரங்கபாத் நகர் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்.. மறைமுகமாக தாக்கிய சிவ சேனா..
சிவ சேனா

இந்தியாவின் அரசியலமைப்பு மதசார்ப்பற்றது. அவுரங்கசீப் மற்ற மதங்கள் மீது கடும் வெறுப்பை கொண்டு இருந்தார். அவர் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களை துன்புறுத்தினார். அவர்களின் நினைவுசின்னங்கள் குறித்து நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?. அவுரங்கசீப் யார்? குறைந்தபட்சம் மகாராஷ்டிராவது இதை விளக்க தேவையில்லை. ஆகையால், ஒரு உண்மையான மராத்தி மற்றும் ஒரு தீவிர இந்து அவுரங்கசீப்புடன் இணைவதற்கு எந்த காரணமும் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.