ராமர் உலகம் முழுமைக்கும் உரியவர்… நேபாள பிரதமருக்கு சிவசேனா பதிலடி!

 

ராமர் உலகம் முழுமைக்கும் உரியவர்… நேபாள பிரதமருக்கு சிவசேனா பதிலடி!

ராமர் பிறந்த அயோத்தியா நேபாளத்தில் உள்ளது என்று சர்ச்சைக் கருத்தை வெளியிட்ட நேபாள பிரதமர் ஒளிக்கு சிவசேனா பதிலடி கொடுத்துள்ளது.
வால்மீகி ராமாயணத்தை நேபாள மொழிக்கு மொழிபெயர்த்தவரது விழாவில் பங்கேற்ற நேபாள பிரதமர் ஒளி, ராமர் பிறந்த இடம் நேபாளத்தில் உள்ளது. ராமர் இந்தியர் இல்லை, அவர் ஒரு நேபாளி என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அவருக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ராமர் உலகம் முழுமைக்கும் உரியவர்… நேபாள பிரதமருக்கு சிவசேனா பதிலடி!இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தை ஆட்சி செய்து வரும் சிவசேனா கட்சி நேபாள பிரதமர் ஒளியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில், “ராமர் உலகம் முழுமைக்கும் சொந்தமானவர். ஆனால் அவர் பிறந்த அயோத்தியா இந்தியாவுக்கு சொந்தமானது. புராணத்தில் சராயு நதிக்கு அருகே அயோத்தி உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமர் உலகம் முழுமைக்கும் உரியவர்… நேபாள பிரதமருக்கு சிவசேனா பதிலடி!அப்படிப்பட்ட அயோத்தி உத்தரப்பிரதேசத்தில்தான் உள்ளது, நேபாளத்தில் இல்லை. ராமர் கோவிலுக்காக கர சேவகர்கள் தங்கள் குறுதியைக் கொடுத்து அந்த சரயு நதியை ரத்தமாக மாற்றினார்கள். சீனாவின் அடிமையாக உள்ள ஒளி அப்போது எதுவும் செய்தது இல்லை. இன்று அயோத்தி மற்றும் ராமரை நேபாளத்துக்கு உரியவர் என்று சொந்தம் கொண்டாடும் ஒளி, நாளை பாபரையும் நேபாளி என்று சொல்லக்கூடும்” என்று கடுமையாக விமர்சித்துள்ளது.