“உங்களுக்கு அழிவுகாலம் நெருங்கிடுச்சு” – பாஜகவுக்கு சாபமிட்ட சிவசேனா!

 

“உங்களுக்கு அழிவுகாலம் நெருங்கிடுச்சு” – பாஜகவுக்கு சாபமிட்ட சிவசேனா!

மகாராஷ்டிராவில் பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைத்தது சிவசேனா. தன்னைப் பகைத்துக் கொண்டவர்கள் எவரும் அரசியலில் நிம்மதியாக இருக்கக் கூடாது என்பது போலவே பாஜக சிவசேனாவிடம் நடந்துகொள்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியில் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சமயம் கூட மகாராஷ்டிரா கேட்ட உதவிகளை உதாசீனப்படுத்தியது மத்திய பாஜக அரசு. இதனால் இரு கட்சித் தலைவர்களும் மாறி மாறி திட்டி தீர்த்து வருகின்றனர்.

“உங்களுக்கு அழிவுகாலம் நெருங்கிடுச்சு” – பாஜகவுக்கு சாபமிட்ட சிவசேனா!

சமீபத்தில் மகாராஷ்டிரா பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவரும் எம்எல்சி உறுப்பினருமான பிரசாத் லாட் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேவை ஏற்பட்டால் மும்பையிலுள்ள சிவசேனாவின் தலைமையகமான சிவசேனா பவனையும் இடிக்க தயங்கமாட்டோம்” என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார். இது சிவசேனா தலைவர்கள் மத்தியிலும் தொண்டர்கள் இடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உடனே இதுதொடர்பாக விளக்கமளித்த பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல் முதல்வர் ஃபட்னாவிஸ், அடிதடி அரசியல் பாஜகவின் கலாச்சாரம் கிடையாது என்றும், தேர்தலில் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம் எனவும் கூறினார்.

“உங்களுக்கு அழிவுகாலம் நெருங்கிடுச்சு” – பாஜகவுக்கு சாபமிட்ட சிவசேனா!

சேனா பவானுக்கு வெளியே பாஜக ஆதரவாளர் ஒருவரை சிவசேனா கட்சியினர் தாக்கியதாகவும் அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே பிரசாத் லாட் அவ்வாறு பேசியதாகவும் விளக்கமளித்தார். தற்போது பிரசாத் லாட்டையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், “பாஜகவினரின் சமீபத்திய மோசமான நடவடிக்கையால் மகாராஷ்டிராவில் பாஜகவுக்கான அழிவு காலம் அருகே நெருங்கிவிட்டது. சிவசேனா பவனை யாரெல்லாம் இழிவாகப் பார்த்தார்களோ அவர்கள் அழிந்துபோன வரலாறை பாஜகவினருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

“உங்களுக்கு அழிவுகாலம் நெருங்கிடுச்சு” – பாஜகவுக்கு சாபமிட்ட சிவசேனா!
பிரசாத் லாட்

பாஜக என்பது ஒருகாலத்தில் விசுவாசமான தொண்டர்களும் நல்ல தலைவர்களும் இருந்த கட்சியாக இருந்தது வெளியாட்களுக்கோ, கட்சியைத் தாழ்த்தும் வகையில் பேசுபவர்களுக்கோ அங்கு இடமில்லை என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது கட்சியின் உண்மையான சிந்தாந்தங்களைக் கொண்டிருப்பவர்கள்கூட தரம் தாழ்ந்தவர்களைத்தான் உயர்த்திப் பிடிக்கிறார்கள். அதனால்தான் கூறுகிறோம், மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு அழிவு காலம் நெருங்கிவிட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.