இதை மட்டும் செய்தால் போதும்….. மோடி இன்று இருப்பதை காட்டிலும் உயர்ந்த மனிதராக மாறுவார்… சிவ சேனா

இதை மட்டும் செய்தால் போதும்….. மோடி இன்று இருப்பதை காட்டிலும் உயர்ந்த மனிதராக மாறுவார்… சிவ சேனா

வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் மோடி இன்று இருப்பதை காட்டிலும் உயர்ந்த மனிதராக மாறுவார் என்று சிவ சேனா தெரிவித்துள்ளது.

சிவ சேனாவின் ஊது குழலான சாம்னா பத்திரிகையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெளியான கட்டுரையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும், விவசாயிகள் பிடிவாதமாக தங்களது போராட்டத்தை தொடருகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் பேச்சை கூட இந்த விவசாயிகள் கேட்கவில்லை என்று மத்திய அரசு சார்பாக சொல்லப்படும்.

இதை மட்டும் செய்தால் போதும்….. மோடி இன்று இருப்பதை காட்டிலும் உயர்ந்த மனிதராக மாறுவார்… சிவ சேனா
சிவ சேனா

கேள்வி உச்ச நீதிமன்றத்தின் கவுரவதத பற்றியது அல்ல. ஆனால் நாட்டின் வேளாண் கொள்கை பற்றியது. வேளாண் சட்டங்கள் திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் கோருகிறார்கள். இந்த முடிவை அரசு எடுக்க வேண்டும். கிளர்ச்சி செய்யும் விவசாயிகள் கலிஸ்தானி ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்துவதன் மூலம் அவமானப்படுத்தப்படுகிறார்கள். கலிஸ்தானி ஆதரவாளர்கள் இந்த இயக்கத்தில் (போராட்டம்) நுழைந்திருந்தால் இதுவும் அரசின் தோல்வி.

இதை மட்டும் செய்தால் போதும்….. மோடி இன்று இருப்பதை காட்டிலும் உயர்ந்த மனிதராக மாறுவார்… சிவ சேனா
விவசாயிகள் போராட்டம்

அரசு இந்த போராட்டத்தை முடிக்க விரும்பவில்லை. ஆனால் அதனை தேச விரோதம் என்று சாயம் பூசி அரசியல் செய்ய விரும்புகிறது. இந்த போராட்டத்தின் தைரியத்தையும், பிடிவாதத்தையும் பிரதமர் மோடி வரவேற்க வேண்டும். வேளாண் சட்டங்களை ரத்து செய்யப்படுவதன் மூலம் விவசாயிகள் மதிக்கப்பட வேண்டும். மோடி இன்று இருப்பதை காட்டிலும் உயர்ந்த மனிதராக மாறுவார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.