டிரம்பின் தோல்வியிலிருந்து இந்தியா எதையாவது கற்றுக்கொள்ள முடிந்தால் நல்லது…. சிவ சேனா

 

டிரம்பின் தோல்வியிலிருந்து இந்தியா எதையாவது கற்றுக்கொள்ள முடிந்தால் நல்லது…. சிவ சேனா

டிரம்பின் தோல்வியிலிருந்து இந்தியா எதையாவது கற்றுக்கொள்ள முடிந்தால் நல்லது என்று மறைமுகமாக பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்று சிவ சேனா தெரிவித்துள்ளது.

சிவ சேனாவின் ஊதுகுழலான சாம்னா பத்திரிகையில் டிரம்ப் தோல்வியை பீகார் தேர்தலுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. சாம்னாவில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: அதிபர் டிரம்ப் ஒருபோதும் நாட்டின் தலைமை பதவிக்கு தகுதியானவர் இல்லை. டிரம்ப் விஷயத்தில் அமெரிக்க மக்கள் தங்களது தவறுகளை 4 ஆண்டுகளில் திருத்தி விட்டனர். அவர் தனது வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. டிரம்பின் தோல்வியிலிருந்து நாம் எதையாவது கற்றுக்கொள்ள முடிந்தால், அது நல்லது. அமெரிக்காவில் வேலையின்மை தொற்றுநோய் கோவிட்-19ஐ விட அதிகம்.

டிரம்பின் தோல்வியிலிருந்து இந்தியா எதையாவது கற்றுக்கொள்ள முடிந்தால் நல்லது…. சிவ சேனா
சிவ சேனா

இருப்பினும் அதற்கு தீர்வு கண்டுபிடிப்பதற்கு பதிலாக அபத்தங்களின் கேலிக்கூத்து, பயணங்கள் மற்றும் அரசியல் கோஷங்களில் அதிகம் முக்கியத்துவம் கொடுத்தார். டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. வாக்குப்பதிவில் மோசடி நடந்ததாக அபத்தமாக குற்றம்சாட்டுகிறார். நமது நாட்டில் டிரம்புக்கு எப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதை மறக்க வேண்டும். தவறான மனிதன் பக்கத்தில் நிற்பது நமது நாட்டின் கலாச்சாரம் அல்ல. பைடன் அமெரிக்க தலைவராக ஆக உள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டிரம்பின் தோல்வியிலிருந்து இந்தியா எதையாவது கற்றுக்கொள்ள முடிந்தால் நல்லது…. சிவ சேனா
பிரதமர் மோடி

டிரம்ப் அவரது சாதனைகளை கண்டித்தார், அவர் பெண்களை மதிக்கவில்லை. அத்தகைய நபரை நமது பிரதமர் மற்றும் பா.ஜ.க.வினர் ஆதரித்தனர். இந்தியா நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை எவ்வாறு ஏற்பாடு செய்து இருந்தாலும், சிமிக்க அமெரிக்காவின் விவேகமான மக்கள், டிரம்புக்கு பை-பை சொல்லி தங்களது தவறை சரி செய்தனர். அதேபோல் பிரதமர் மோடி, நிதிஷ் குமார் போன்றவர்கள் இளைஞர் தேஜஸ்வி யாதவ் முன் நிற்க முடியவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.