கங்கை நதியில் மிதக்கும் சடலங்கள் விவகாரம்.. ஆர்.எஸ்.எஸ். தலைவரை சீண்டும் சிவ சேனா

கங்கை நதியில் மிதக்கும் சடலங்கள் விவகாரம்.. ஆர்.எஸ்.எஸ். தலைவரை சீண்டும் சிவ சேனா

கங்கை நதியில் மிதந்து வரும் சடலங்கள் விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஏதாவது கருத்து சொல்வார் என்று எதிர்பார்த்தோம் ஆனால் மவுனமாக இருந்தார் என்று சிவ சேனா தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக கங்கை நதியில் பல சடலங்கள் மிதந்து வருகின்றன அல்லது நதி கரைகளின் மணலில் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த செய்தியை குறிப்பிட்டு மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

கங்கை நதியில் மிதக்கும் சடலங்கள் விவகாரம்.. ஆர்.எஸ்.எஸ். தலைவரை சீண்டும் சிவ சேனா
கங்கை நதியில் மிதக்கும் சடலங்கள்

இந்த சூழ்நிலையில் கங்கை நதியில் சடலங்கள் மிதந்து வரும் விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சிவ சேனா சீண்டுகிறது. சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரவுத் இது தொடர்பாக கூறியதாவது:

கங்கை நதியில் மிதக்கும் சடலங்கள் விவகாரம்.. ஆர்.எஸ்.எஸ். தலைவரை சீண்டும் சிவ சேனா
சிவ சேனா

கங்கை நதியில் ஏராளமான உடல்கள் மிதந்து வந்த போது அது குறித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஏதாவது கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எந்தவித கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். ராமர் கோயில் விவகாரத்தில் அளித்த முக்கியத்துவம் போல் கங்கை நதிக்கும் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.