மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்.எல்.ஏ. உண்ணாவிரதம் மிரட்டல்… பதிலடி கொடுத்த சிவ சேனா

 

மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்.எல்.ஏ. உண்ணாவிரதம் மிரட்டல்… பதிலடி கொடுத்த சிவ சேனா

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைலாஷ் கோரந்யால், தொகுதி வளர்ச்சி நிதி தொடர்பாக உண்ணாவிரதம் இருக்க போவதாகவும், தனக்கு 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகவும் சிவ சேனா அரசுக்கு மிரட்டல் விடுத்தார். மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு நிதி விநியோகம் வளர்ப்பு தாய் மனப்பான்மையில் அளிக்கப்படுகிறது என தெரிவித்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் போராட்டம் சோனியா மற்றும் ராகுல் காந்தியை கேள்வி கேட்பதற்கு சமம் என சிவ சேனா பதிலடி கொடுத்துள்ளது.

மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்.எல்.ஏ. உண்ணாவிரதம் மிரட்டல்… பதிலடி கொடுத்த சிவ சேனா
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே

சிவ சேனா தனது பத்திரிகையான சாமனாவில், மகா விகாஸ் அகாடி கூட்டணி தனது 5 ஆண்டு காலத்தை நிறைவு செய்யும், கூட்டணிக்குள் மனக்கசப்பு காட்டப்படுவதால் மகாராஷ்டிராவில் உள்ள எதிர்கட்சி மகிழ்ச்சிடைய தேவையில்லை. நாட்டின் நிலைமை சரியாக இல்லை. காங்கிரஸ் கட்சியிலேயே ஸ்திரமின்மை மற்றும் அமைதியின்மை உள்ளது. மோடி அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. ஆனால் பாராளுமன்ற ஜனநாயகத்தில் தீவிர எதிர்க்கட்சி தேவை. காங்கிரஸ் ஒரு தீவிர எதிர்க்கட்சியின் பங்கை வகிக்க வேண்டும்.

மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்.எல்.ஏ. உண்ணாவிரதம் மிரட்டல்… பதிலடி கொடுத்த சிவ சேனா
கைலாஷ் கோரந்யால்

ஆனால் ஆளும் கட்சியை (மத்தியில்) கேள்வி கேட்பதற்கு பதிலாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் பங்காளிகளாக இருக்கும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள். இது ஒரு ஜனநாயகத்தில் அவர்களின் உரிமை, ஆனால் இது அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னுரிமை அளித்த சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை கேள்வி கேட்பதற்கு ஒத்ததாகும். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள போகிறார்கள் என்றால் அது கட்சியின் விஷயமாகும். எதிர்கட்சிக்கு எளிதான பிரச்சினை கிடைக்கும். அது காங்கிரசின் துயரங்களை அதிகரிக்கும். உத்தவ் தாக்கரே அரசியில் பிரச்சினைகளை தீர்க்கும் திறன் கொண்டவர் என தெரிவித்துள்ளது.