எவ்வளவு பாராட்டினாலும் போதாது… பா.ஜ.க. அரசை பாராட்டிய சிவ சேனா

 

எவ்வளவு பாராட்டினாலும் போதாது… பா.ஜ.க. அரசை பாராட்டிய சிவ சேனா

அனாதை குழந்தைகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியத்துடன் இலவச கல்வியையும் வழங்கும் மத்திய பிரதேச பா.ஜ.க. அரசை சிவ சேனா பாராட்டியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் கோவிட் தொற்று நோயால் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களை இழந்து பரிதவிக்கும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, அந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியுத்துடன் இலவச கல்வி மற்றம் இந்த குடும்பங்களுக்கு இலவ ரேஷன் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் அறிவித்தார். மத்திய பிரதேச பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் மத்திய பிரதேச பா.ஜ.க. அரசை சிவ சேனா பாராட்டியுள்ளது.

எவ்வளவு பாராட்டினாலும் போதாது… பா.ஜ.க. அரசை பாராட்டிய சிவ சேனா
அனாதை குழந்தைகள் (கோப்புப்படம்)

சிவ சேனாவின் ஊதுகுழலான சாம்னா பத்திரிகையின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் நாட்டில் அழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த பின்னணியில் கோவிட் காரணமாக அனாதையாகிய குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க மத்திய பிரதேச அரசு எடுத்த முடிவு நாட்டுக்கு ஒரு செய்தியாகும்.இந்த மனிதாபிமான நடவடிக்கைக்கு முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகனையும், அவரது அரசாங்கத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் போதாது. இந்த அனாதை குழந்தைகளை எவ்வாறு ஆதரிப்பது என்பது குறித்து பலர் விவாதித்து ஆலோசனைகள் வழங்கினர்.

எவ்வளவு பாராட்டினாலும் போதாது… பா.ஜ.க. அரசை பாராட்டிய சிவ சேனா
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

மகாராஷ்டிராவிலும் இது விவாதிக்கப்பட்டது. ஆனால் இந்த தீவிரமான பிரச்சினையை புறக்கணிப்பதற்கு பதிலாக, மத்திய பிரதேச பா.ஜ.க. அரசாங்கம், அனாதை குழந்தைகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் முடிவை அறிவித்தது. மேலும் அந்த குழந்தைகளுக்கான இலவச கல்வி பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த முக்கியமான நேரத்தில் நாட்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படும் சென்ட்ரல் விஸ்டா போன்ற திட்டங்கள் தேவையில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.