ராமருடனான எங்களது தொடர்பு நேரடியானது.. விழாவுக்கு அழைக்கவில்லையென்றாலும் கவலை இல்லை.. சிவ சேனா

ராமருடனான எங்களது தொடர்பு நேரடியானது.. விழாவுக்கு அழைக்கவில்லையென்றாலும் கவலை இல்லை.. சிவ சேனா

அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டுவதற்கான பணிகள் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. முதல் கட்டமான ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 5ம் தேதியன்று ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமருடனான எங்களது தொடர்பு நேரடியானது.. விழாவுக்கு அழைக்கவில்லையென்றாலும் கவலை இல்லை.. சிவ சேனா

கடந்த சனிக்கிழமையன்று ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் கூடி, கோயில் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு அடிக்கல் நாட்ட ஆகஸ்ட் 3 மற்றும் 5ம் தேதிகளை தேர்வு செய்தது. மேலும் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுத்தது. அதேசமயம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சிவ சேனா கட்சிக்கு அந்த அறக்கட்டளை அழைப்பு விடுத்ததாக தெரியவில்லை.

ராமருடனான எங்களது தொடர்பு நேரடியானது.. விழாவுக்கு அழைக்கவில்லையென்றாலும் கவலை இல்லை.. சிவ சேனா

இந்த சூழ்நிலையில், சிவ சேனாவின் தெற்கு மும்பை எம்.பி. அரவிந்த் சாவந்த் இது குறித்து கூறுகையில், அவர்கள் எங்களை அழைத்தாலும், அழைக்கவில்லையென்றாலும் எங்களுக்கு கவலை இல்லை. உத்தவ் ஜி அந்த இடத்துக்கு 2 முறை சென்றுள்ளார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் பாலாசாகேப் தாக்கரே உறுதியான அறிக்கைகளையும் கொடுத்திருந்தார். ராமர் கோயிலுக்கு எங்கள் பணியை செய்துள்ளோம். கடவுள் ராமருடனான எங்களது உறவு நேரடியானது என தெரிவித்தார்.