முதல்ல ராமர் கோயில், அப்புறம்தான் அரசாங்கம் என்று பல ஆண்டுகளாக கூறி வருகிறோம்.. சிவ சேனா தலைவர்

முதல்ல ராமர் கோயில், அப்புறம்தான் அரசாங்கம் என்று பல ஆண்டுகளாக கூறி வருகிறோம்.. சிவ சேனா தலைவர்

ஆகஸ்ட் 5ம் தேதியன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இது தொடர்பாக சிவ சேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சிவ சைனிக் என்ற முறையில் நான் சொல்கிறேன், பல கோடி மக்களின் நம்பிக்கை என்பதால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என மறைந்த பாலாசாகேப் தாக்கரே கூறினார். என்னுடைய சிவ சைனிக் பாபர் மசூதியை இடித்து இருந்தால் நான் பெருமை அடைந்து இருப்பேன் என 1992ல் பாலாசாகேப் தெரிவித்தார்.

முதல்ல ராமர் கோயில், அப்புறம்தான் அரசாங்கம் என்று பல ஆண்டுகளாக கூறி வருகிறோம்.. சிவ சேனா தலைவர்

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என சிவ சேனாதான் முதலில் கோரிக்கை விடுத்தது. முதலில் கோயில் அப்புறம் அரசாங்கம் என எங்க கட்சி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறது. முழு உலகமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. ஆனால் ராம ராஜ்யத்தின் எண்ணம் என்ன, ஒவ்வொருவரின் நலன்? முதல்வர் உத்தவ் தாக்கரே ஜி மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறார். உத்தவ் ஜி அடிக்கடி அயோத்திக்கு சென்று வந்துள்ளார், அதனை தொடர்ந்து செய்வார்.

முதல்ல ராமர் கோயில், அப்புறம்தான் அரசாங்கம் என்று பல ஆண்டுகளாக கூறி வருகிறோம்.. சிவ சேனா தலைவர்

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு அழைத்தால் அயோத்தி சென்று விழாவில் பங்கேற்பது தொடர்பாக சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே முடிவு செய்வார். எங்களை அழைத்தாலும், அழைக்கவில்லை என்றாலும் நாங்கள் வேதனைபட மாட்டோம். எங்கள் நம்பிக்கை அப்படியே இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், கோயில் கட்டுவதன் மூலம் கொரோனா வைரஸை ஒழிக்க முடியும் என சரத் பவார் கூறியது குறித்து பதில் அளிக்கையில், பவார் சாகேப் எங்களுக்கு மரியாதைக்குரியவர். அவர் உயரமான அந்தஸ்துள்ள தலைவர். அவரது கருத்து குறித்து நான் கருத்து தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.