பா.ஜ.க.வுடன் இணைந்தால் கட்சிக்கும், தொண்டர்களுக்கும் நல்லது.. தாக்கரேவிடம் சிவ சேனா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

பா.ஜ.க.வுடன் இணைந்தால் கட்சிக்கும், தொண்டர்களுக்கும் நல்லது.. தாக்கரேவிடம் சிவ சேனா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

சிவ சேனாவும், பா.ஜ.க.வும் மீண்டும் ஒன்றிணைந்தால் அது கட்சிக்கும், தொண்டர்களுக்கும் பயனளிக்கும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு சிவ சேனா எம்.எல்.ஏ. ஒருவர் கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் தானே சட்டப்பேரவை தொகுதி சிவ சேனா எம்.பி. பிரதாப் சர்நாயக், சிவ சேனா தலைவரும், அம்மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கட்சியை (சிவ சேனா) பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன என்பதால் நீங்கள் (உத்தவ் தாக்கரே) பிரதமர் மோடியுடன் நெருக்கமாக பழக வேண்டும்.

பா.ஜ.க.வுடன் இணைந்தால் கட்சிக்கும், தொண்டர்களுக்கும் நல்லது.. தாக்கரேவிடம் சிவ சேனா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
பிரதாப் சர்நாயக்

தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் தங்களது சொந்த முதல்வரை விரும்புகின்றன. காங்கிரஸ் தனியாக போட்டியிட விரும்புகிறது. தேசியவாத காங்கிரசோ சிவ சேனாவிலிருந்து தலைவர்களை பிரிக்க முயற்சி செய்கிறது. சிவ சேனாவும், பா.ஜ.க.வும் மீண்டும் ஒன்றிணைந்தால் அது கட்சிக்கும், தொண்டர்களுக்கும் பயனளிக்கும்.

பா.ஜ.க.வுடன் இணைந்தால் கட்சிக்கும், தொண்டர்களுக்கும் நல்லது.. தாக்கரேவிடம் சிவ சேனா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
முதல்வர் உத்தவ் தாக்கரே

நம்மிடம் எந்த தவறும் இல்லாத போதிலும் மத்திய விசாரணை அமைப்புகள் நம்மை குறிவைக்கிறது. நீங்கள் பிரதமர் மோடியுடன் நெருங்கினால், ரவீந்திர வைகர், அனில் பராப், பிரதாப் சர்நாயக் மற்றும் அவர்களது குடும்பங்களின் துன்பங்கள் முடிவுக்கு வரும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.