நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்குக்கும், ஆதித்யா தாக்கரேவுக்கு தொடர்பு கிடையாது.. முட்டு கொடுக்கும் சிவ சேனா

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்குக்கும், ஆதித்யா தாக்கரேவுக்கு தொடர்பு கிடையாது.. முட்டு கொடுக்கும் சிவ சேனா

மும்பையை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. அதுல் பட்கல்லர் அண்மையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் அந்த கடிதத்தில் இளம் அமைச்சருக்கும் சில தொடர்பு இருப்பது குறித்து விசாரிப்பது அவசியம் என குறிப்பிட்டு இருந்தார். இதுதவிர நேற்று நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்ய பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு முதல்வர் நிதிஷ் தலைமையிலான பீகார் அரசு கடிதம் எழுதியது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்குக்கும், ஆதித்யா தாக்கரேவுக்கு தொடர்பு கிடையாது.. முட்டு கொடுக்கும் சிவ சேனா

இந்த சூழ்நிலையில் மகாராஷ்டிரா முதல்வரின் மகனும், அம்மாநில அமைச்சருமான ஆதித்யா தாக்கரேவுக்கும், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என சிவ சேனா அமைச்சர் அனில் பராப் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; கடந்த சில நாட்களாக இந்த வழக்கில் இளம் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் பிரச்சினை எழுப்புகின்றனர். அது இளம் தலைவரின் நற்பெயரை கெடுக்கும் ஒரு முயற்சியை தவிர வேறுஎதுவும் இல்லை. எதிர்வரும் பீகார் தேர்தலை மனதில் வைத்து இந்த விஷயத்தில் அரசியலை எதிர்க்கட்சிகள் விளையாடுகின்றன.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்குக்கும், ஆதித்யா தாக்கரேவுக்கு தொடர்பு கிடையாது.. முட்டு கொடுக்கும் சிவ சேனா

பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது இதே காவல்துறையின் வேலையை பாராட்டினார்கள் தற்போது அதே காவல்துறையை விமர்சித்து வருகிறார்கள் மற்றும் அவர்களின் செயல்திறனை கேள்வி எழுப்புகிறார்கள். ஆதாரம் இல்லாமல் ஒருவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் மூலம் ஒருவரின் நற்பெயரை கேவலப்படுத்த இது ஒரு பழைய தந்திரம். கடந்த காலங்களில் மோடி மற்றும் அமித் ஷா கூட விமர்சனங்களை எதிர்கொண்டனர். ஆனால் இறுதியில் அவர்கள் முறையே கோத்ரா மற்றும் நீதிபதி லோயா வழக்கில் குற்றமற்றவர்களாக வந்தார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.