பா.ஜ.க.வுடன் சிவ சேனா மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை.. உத்தவ் தாக்கரே

 

பா.ஜ.க.வுடன் சிவ சேனா மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை.. உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வுடன் சிவ சேனா கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்று சிவ சேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உறுதியாக தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அண்மையில் துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்டோருடன் டெல்லி சென்று மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மேலும் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் தனியாக சந்தித்து பேசினார். இதனையடுத்து சிவ சேனா மீண்டும் பா.ஜ.க.வுடன் இணையும் என்று பேசப்பட்டது.

பா.ஜ.க.வுடன் சிவ சேனா மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை.. உத்தவ் தாக்கரே
பா.ஜ.க.

இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், சூழ்நிலையை பொறுத்து தகுந்த முடிவு (சிவ சேனாவுடன் கூட்டணி) எடுக்கப்படும். சிவ சேனாவுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாங்கள் எதிரிகள் அல்ல என்று தெரிவித்து இருந்தார். இதற்கு சிவ சேனாவின் சஞ்சய் ரவுத் பதிலளிக்கையில், நாங்கள் (சிவ சேனா-பா.ஜ.க.) இந்தியா-பாகிஸ்தான் அல்ல. அமீர்கான் மற்றும் கிரண் ராவ் ஆகியோரை பாருங்கள், அது (சிவ சேனா-பா.ஜ.க. உறவு) அவர்களை போன்றது. எங்கள் அரசியல் வழிகள் வேறுப்பட்டவை. ஆனால் நட்பு அப்படியே இருக்கும் என்று தெரிவித்தார்.

பா.ஜ.க.வுடன் சிவ சேனா மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை.. உத்தவ் தாக்கரே
சஞ்சய் ரவுத்

தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சஞ்சய் ரவுத் அறிக்கைகளை வைத்து பார்க்கையில் மகாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி ஏற்படலாம் என்று பேசப்பட்டது. ஆனால் சிவ சேனா கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே, மீண்டும் பா.ஜ.க.வுடன் இணைய வாய்ப்பில்லை என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். 2019 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.வுடான கூட்டணியை சிவ சேனா முறித்து கொண்டது. மேலும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சிவ சேனா கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க. எதிர்க்கட்சியாக உள்ளது.