இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்…. சிவ சேனா வலியுறுத்தல்

 

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்…. சிவ சேனா வலியுறுத்தல்

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சிவ சேனாவின் சஞ்சய் ரவுத் வலியுறுத்தியுள்ளார்.

சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரவுத்திடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்தபோது கூறியதாவது: இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் முன்பே தெரிவித்துள்ளோம். அது போன்று ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தால், அது குறித்து ஒரு முடிவு எடுப்போம்.

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்…. சிவ சேனா வலியுறுத்தல்
சஞ்சய் ரவுத்

மக்கள் ஜனாநாய கட்சியின் தலைவி மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் மற்றவர்கள் சீனாவின் ஆதரவுடன் காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ மீட்டெடுக்க விரும்பினால் அவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீரில் தேசியகொடி பறப்பதை யாராவது தடுக்க விரும்பினால் அதன்பிறகு தேசிய கிளர்ச்சி ஏற்படும் என நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்…. சிவ சேனா வலியுறுத்தல்
விஷ்வ இந்து பரிஷத்

கடந்த சில தினங்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச் செயலாளர் தத்தாதரேயா ஹோசாபலே, பொது சிவில் சட்டம் குறித்து பொது விவாதம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். பொது சிவில் சட்டம் தொடர்பாக பொது விவாதம் நடத்த வேண்டும் என்ற தத்தாதரேயாவின் கருத்துக்கு விஷ்வ இந்து பரிஷத்தின் சர்வதேச இணை பொது செயலாளர் சுரேந்திர ஜெயின் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.