சிவசேனா கொடுத்த பணம் வரவில்லை… ராமஜென்ம பூமி டிரஸ்ட் அறிவிப்பால் சர்ச்சை

 

சிவசேனா கொடுத்த பணம் வரவில்லை… ராமஜென்ம பூமி டிரஸ்ட் அறிவிப்பால் சர்ச்சை

ராமர் கோவில் கட்ட ரூ.1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது என்று சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. ஆனால், ஒரு கோடி ரூபாய் கிடைக்கவில்லை என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதற்காக ராமர் கோவில் கட்டுவதற்காக உருவாக்கப்பட்ட பல அறக்கட்டளைகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஶ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கும் போது சிவசேனா

சிவசேனா கொடுத்த பணம் வரவில்லை… ராமஜென்ம பூமி டிரஸ்ட் அறிவிப்பால் சர்ச்சை

தரப்பில் இருந்து ரூ.1 கோடி வழங்கப்படும் என்று உத்தவ் தாக்கரே அறிவித்திருந்தார்.
தற்போது ஐந்தாம் தேதி கோவில் கட்டுமானப் பணி தொடங்க உள்ள நிலையில் ரூ.1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. கடந்த 27ம் தேதி உத்தவ் தாக்கரேயின் பிறந்த நாளையொட்டி ரூ.1 கோடி ரூபாய் தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வங்கிக் கணக்குக்கு செலுத்தப்பட்டுவிட்டது என்று கூறப்பட்டிருந்தது. பணம் டிரஸ்ட்க்கு போய் சேர்ந்துவிட்டதாக ஒப்புகை சீட்டும் கிடைத்துவிட்டது என்று கூறப்பட்டு இருந்தது.

சிவசேனா கொடுத்த பணம் வரவில்லை… ராமஜென்ம பூமி டிரஸ்ட் அறிவிப்பால் சர்ச்சை
ஆனால், இதை தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை மறுத்துள்ளது. அறக்கட்டளை தலைவர் நிர்த்ய கோபால் தாஸ் மகாராஜ் சிவ சேனா அனுப்பியதாக கூறும் பணம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். இதற்கு சிவசேனா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க-வுக்கு பயந்து சிவ சேனா மீது அறக்கட்டளை நிர்வாகிகள் தவறான தகவலை பரப்புவதாக சிவசேனா கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சிவசேனா கொடுத்த பணம் வரவில்லை… ராமஜென்ம பூமி டிரஸ்ட் அறிவிப்பால் சர்ச்சை
ராமர் கோவில் கட்ட காரணமாக இருந்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. நாட்டின் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் குடியரசுத் தலைவருக்கு கூட விழாவில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்படவில்லை என்று சர்ச்சை கிளம்பியுள்ள நேரத்தில், சிவசேனா மீது அறகட்டளை நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.