ஆட்சியில் இருக்கும் வரை ஒருவருக்கொருவர் தொண்டர்களை இழுக்க கூடாது… சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் முடிவு

ஆட்சியில் இருக்கும் வரை ஒருவருக்கொருவர் தொண்டர்களை இழுக்க கூடாது… சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் முடிவு

மகாராஷ்டிராவில், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவை சேர்ந்த கவுன்சிலர்கள் 5 பேர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதனால் கூட்டணிக்கும் வேறுபாடு அதிகரித்தது. இதனையடுத்து சிவ சேனா செயலாளர் மிலிந்த் நர்வேகர், தேசியவாத காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், துணை முதல்வருமான அஜித் பவாரிடம் பேசினார்.

ஆட்சியில் இருக்கும் வரை ஒருவருக்கொருவர் தொண்டர்களை இழுக்க கூடாது… சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் முடிவு

அப்போது, அரசாங்கத்தில் மற்றும் கூட்டணியில் இருக்கும் வரை ஒருவருக்கொருவர் தொண்டர்களை இழுக்கும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என அஜித் பவாரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதன் தொடர்ச்சியாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முதல்வர் தாக்கரே சந்தித்து 5 கவுன்சிலர்களும் சிவ சேனாவுக்கு திரும்புவார்கள் என உறுதி அளித்தார். இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தாவிய 5 கவுன்சிலர்களும் உத்தவ் தாக்கரே வீடான மாடோஸ்ரீக்கு சென்று தாய் கட்சியில் மீண்டும் இணைந்தனர்.

ஆட்சியில் இருக்கும் வரை ஒருவருக்கொருவர் தொண்டர்களை இழுக்க கூடாது… சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் முடிவு

சரத் பவார் தன்னை சந்தித்த போது, நாம் இந்த அரசாங்கத்தில் இருக்கும் வரை முதுகில் குத்த வேண்டாம் என உத்தவ் தாக்கரே தெரிவித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உத்தவ் தாக்கரேவின் கருத்தை ஏற்றுக்கொண்ட சரத் பவார் தனது உறவினர் அஜித் பவாரை சமாதானம் செய்துள்ளார். இந்த அரசு நீண்ட நாளுக்கு செயல்பட வேண்டும் என விரும்பினால் இது போன்ற சின்ன விஷயங்களை தவிர்க்க வேண்டும் என அஜித் பவாருக்கு அறிவுரை சொல்லியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன