கொரோனா வைரஸ் 2வது அலைக்கு மத்திய அரசும், தேர்தல் ஆணையமும்தான் பொறுப்பு.. சிவ சேனா

 

கொரோனா வைரஸ் 2வது அலைக்கு மத்திய அரசும், தேர்தல் ஆணையமும்தான் பொறுப்பு.. சிவ சேனா

கொரோனா வைரஸின் 2வது அலைக்கு மத்திய அரசும், தேர்தல் ஆணையமும்தான் பொறுப்பு என்று சிவ சேனா குற்றம் சாட்டியுள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸின் 2வது அலை தீவிரமாக உள்ளது. தினசி கொரோனா பாதிப்பு 2.50 லட்சத்தை தாண்டி விட்டது. இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸின் 2வது அலைக்கு மத்திய அரசும் தேர்தல் ஆணையமும்தான் காரணம் என சிவ சேனாவில் அரசியல் ஊதுகுழலான சாம்னா பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் தொற்றுநோய் பரவலுக்கு (கடந்த ஆண்டு) சீனா பொறுப்பாக இருக்கலாம். ஆனால் கொரோனா வைரஸின் 2வது அலைக்கு தேர்தல் ஆணையமும், மத்திய அரசும்தான் பொறுப்பு. அண்மையில் தேர்தல் நடந்த அல்லது தேர்தல் நடந்து கொண்டு இருக்கும் மாநிலங்களிலிருந்து கொரோனா வைரஸ் நாடு முழுவதும் 500 மடங்கு வேகத்தில் பரவுகிறது.

கொரோனா வைரஸ் 2வது அலைக்கு மத்திய அரசும், தேர்தல் ஆணையமும்தான் பொறுப்பு.. சிவ சேனா
பிரதமர் மோடி

தேர்தல்களுக்காகவும், அவர்களின் அரசியல் நலன்களுக்காகவும் டெல்லியில் ஆட்சியாளர்கள் தொற்றுநோய்களின் அலைகளை உருவாக்கினர். தற்போது ஆக்சிஜன், ரெம்டிசிவிர் மருந்து, படுக்கைகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறை உள்ளது. தகன பகுதிகள் நிரம்பி வழிகிறது. ஆனால் மத்திய அரசு மேற்கு வங்க தேர்தலில் மும்முரமாக உள்ளது. மத்திய அரசு தனது அரசியலின் அளவை குறைத்து அதற்க பதிலாக கொரோனா வைரசுக்கு எதிரான போரில் கவனம் செலுத்தி இருந்தால் நிலைமை கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். மேற்கு வங்கத்திலிருந்து பா.ஜ.க. தொண்டர்கள் கொரோனா வைரசுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களது வீடுகளுக்கு திரும்புகின்றனர்.

கொரோனா வைரஸ் 2வது அலைக்கு மத்திய அரசும், தேர்தல் ஆணையமும்தான் பொறுப்பு.. சிவ சேனா
ஹர்ஷ் வர்தன்

கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன. ஆனால் தேர்தல் கூட்டங்களும், கும்பமேளா போன்ற மதக்கூட்டங்களும் நிறுத்தப்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. கும்பமேளாவுக்காக லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இதனால் வைரஸ் பரவியது. பிரதமர் மோடி மேங்கு வங்கத்தில் தனது தேர்தல் பேரணிகளை நிறுத்த தயாராக இல்லை என்றால், ஹரித்வாரில் உள்ள சாதுக்களை எவ்வாறு குறை கூற முடியும்? மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், பா.ஜ.க. ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசம், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து எதுவும் பேசவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.