பா.ஜ.க.வுக்கு குட்பை சொன்ன சிரோன்மணி அகாலி தளம்.. தேசிய ஜனநாயக கூட்டணி உடைந்தது..

 

பா.ஜ.க.வுக்கு குட்பை சொன்ன சிரோன்மணி அகாலி தளம்.. தேசிய ஜனநாயக கூட்டணி உடைந்தது..

வேளாண் மசோதா தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக சிரோன்மணி அகாலி தளம் நேற்று அறிவித்தது

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா மீதான விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், அத்தியாவசிய விளைபொருட்கள் (திருத்த) மசோதாகளை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும். பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிரோன்மணி அகாலி தளமும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அந்த கட்சியின் கர்சிம்ரத் கவுர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

பா.ஜ.க.வுக்கு குட்பை சொன்ன சிரோன்மணி அகாலி தளம்.. தேசிய ஜனநாயக கூட்டணி உடைந்தது..
சிரோன்மணி அகாலி தளம்

மேலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பது தொடர்பாக பின்னர் முடிவு எடுக்கப்படும் என அந்த கட்சி தெரிவித்து இருந்தது. இந்நிலையில் நேற்று சண்டிகரில் சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் உயர்மட்ட குழுவின் அவசர கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவது என ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. இதனை தகவலை அந்த கட்சியின் தலைவா சுக்பீர் சிங் பாதல் உறுதி செய்தார்.

பா.ஜ.க.வுக்கு குட்பை சொன்ன சிரோன்மணி அகாலி தளம்.. தேசிய ஜனநாயக கூட்டணி உடைந்தது..
சுக்பீர் சிங் பாதல்

சுக்பீர் சிங் பாதல் கூறுகையில், எங்களது விவசாயிகளின் முக்கிய வாக்காளர் தளத்திற்கு பா.ஜ.க.வின் வேளாண் மசோதாக்கள் ஆபத்தான மற்றும் பேரழிவு தரும் என கூறினார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறிய 3வது கட்சி சிரோன்மணி அகாலி தளம். முன்னதாக, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.